பொதுவாகவே சாட் என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு மாலை நேர உணவாகத்தான் அவை இருக்கும். நாம் வழக்கமாக சுவைக்கும் சாட்டுகளுக்கு மாற்றாக வித்தியாச வித்தியாசமான சாட்டுகளை சுவைக்க வேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான பிரட் சாட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பிரட் சாட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
பொதுவாக நாம் எந்தவிதமான சாட்டுகளை எடுத்தாலும் அவை செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். ஆனால் பிரட் சாட் அவ்வாறு அல்ல. இவை செய்வதற்கு மிக மிக எளிமையானவை. அது மட்டும் இன்றி இதை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. ஆகவே இந்த பிரட் சாட்டை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
பிரட் சாட் செய்ய முதலில் நாம் ஸ்பெஷலாக கடலை மாவு, சோள மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், ஆம்சூர் தூள், சாட் மசாலா, ஓம விதைகள், கசூரி மேத்தி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு ஒரு அட்டகாசமான மாவு கலவையை தயாரிப்போம். இந்த மாவு கலவையுடன் டோஸ்ட் செய்யப்பட்ட பிரட்டுடன் நாம் சேர்க்கும் மாதுளை பழம் விதைகள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, புளி சட்னி, கொத்தமல்லி சட்னி, மற்றும் ஓமப் பொடி சேர்ந்து மிக அற்புதமாக இருக்கும்.
இவ் உணவின் வரலாறு:
பிரட் சாட் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசை ஒட்டி உள்ள ஏதேனும் ஒரு பகுதியில் உதயமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. இவை இன்றைக்கும் வட இந்தியாவில் தான் பலராலும் மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு மாலை நேர சிற்றண்டியாக திகழ்கிறது.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
பிரட் சாட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.
இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.
பிரட் சாட்டை முழுமையாக சுமார் 35 நிமிடத்தில் இருந்து 40 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
பிரட் சாட்டை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அதை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் லேசாக சுட வைத்து உண்ணலாம்.
இதை ஒற்றிய உணவுகள்:
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
பிரட் சாட் செய்ய நாம் சேர்க்கும் கடலை மாவில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இருதயம் மற்றும் எலும்பை ஆரோக்கியமாக வைக்க, மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நாம் இதில் பயன்படுத்தும் மாதுளை பழத்தில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை இருதயம், மூளை, மற்றும் சிறுநீர்ப்பாதை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
இதில் நாம் உபயோகிக்கும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.
இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதில் நாம் உபயோகிக்கும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
பிரட் சாட்
தேவையான பொருட்கள்
- 1/2 cup கடலை மாவு
- 1/2 cup மாதுளம் பழம் விதைகள்
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 4 பச்சை மிளகாய்
- 2 பல் பூண்டு
- 2 சிறு துண்டு இஞ்சி
- 1 tsp சோள மாவு
- 2 1/2 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 tsp ஆம்சூர் தூள்
- 2 tsp சாட் மசாலா
- 1/2 tsp ஓம விதைகள்
- 1/2 tsp சீரக தூள்
- 1/2 tsp மல்லி தூள்
- 2 tsp கசூரி மேத்தி
- 1/2 tsp பிளாக் சால்ட்
- 1/2 tsp இஞ்சி பொடி
- 2 tsp பொடித்த வெல்லம்
- 2 எலுமிச்சம் பழம்
- 10 விதைகளை நீக்கிய பேரிச்சம்பழம்
- 1 துண்டு புளி
- தேவையான அளவு பிரட்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு ஓமப் பொடி
- தேவையான அளவு கொத்தமல்லி
- தேவையான அளவு புதினா
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, பூண்டு, இஞ்சி, மற்றும் பேரிச்சம் பழத்தை நறுக்கி, புளியை சுமார் அரை கப் அளவு தண்ணீரில் கரைத்து வைத்து, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது புளி சட்னியை அரைக்க ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, ஒரு கை அளவு புதினா, ஒரு கை அளவு கொத்தமல்லி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழசார், கால் மேஜைகரண்டி அளவு உப்பு, மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு கொத்தமல்லி சட்னியை செய்வதற்கு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை போட்டு அதை நன்கு ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
- ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் இரண்டு நிமிடம் வரை வேக விடவும்.
- இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் சீரக தூள், அரை மேஜைகரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி உப்பு, ப்ளாக் சால்ட், மல்லி தூள், பொடித்த வெல்லம், மற்றும் இஞ்சி பொடியை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் மூன்று நிமிடம் வரை வேக விடவும்.
- மூன்று நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை கீழே இறக்கி வைத்து சற்று நேரம் ஆற விடவும்.
- அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது பூண்டு மற்றும் இஞ்சியை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் கடலை மாவு, சோள மாவு, அரை மேஜைகரண்டி அளவு நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், இரண்டு மேஜைகரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி உப்பு, ஆம்சூர் தூள், ஒரு மேஜைகரண்டி சாட் மசாலா, ஓம விதைகள், கசூரி மேத்தி, மற்றும் கொஞ்சம் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
- பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மாவாக்கி வைத்துக் கொள்ளவும். (மாவு ரொம்ப தண்ணீராகவோ அல்லது ரொம்ப திக்காகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்).
- இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
- நெய் உருகியதும் அதில் ஒவ்வொன்றாக எடுத்து நாம் கரைத்து வைத்திருக்கும் மாவு கலவையில் முக்கி pan னில் போட்டு நன்கு இருபுறமும் டோஸ்ட் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நான் உரித்து வைத்திருக்கும் மாதுளை விதைகளை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், ஒரு கை அளவு புதினா, மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.
- பின்பு அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு சாட் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது நாம் டோஸ்ட் செய்து எடுத்து வைத்திருக்கும் பிரட்டுகளை ஒரு தட்டில் வைத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டி அளவு எடுத்து வைத்து அதை நன்கு தடவி விடவும்.
- அதைத்தொடர்ந்து நாம் செய்து வைத்திருக்கும் புளி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டி அளவு எடுத்து வைத்து அதை தடவி விடவும்.
- அடுத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் மாதுளை பழ விதை மற்றும் வெங்காய கலவையில் இருந்து சுமார் ஒரு கை அளவு எடுத்து வைக்கவும்.
- பின்பு அதன் மேலே ஒரு சிட்டிகை அளவு சாட் மசாலா மற்றும் ஓமப் பொடியை தூவி அதை சுட சுட பரிமாறவும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
பிரட் சாட் செய்ய நாம் கோதுமை பிரட்டை பயன்படுத்தலாமா?
உங்களுக்கு கோதுமை பிரட் விருப்பம் என்றால் நீங்கள் தாராளமாக அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரட் சாட் செய்ய நாம் பயன்படுத்தும் மாதுளை பழ விதைகள் மற்றும் வெங்காய கலவையில் நாம் வேற ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?
பிரட் சாட் இவ்வாறு உண்ணவே மிக சுவையாக இருக்கும். இருப்பினும் நீங்கள் ஏதேனும் காய்கறிகளை உபயோகிக்க வேண்டும் என்று எண்ணினால் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட், அல்லது வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரட் சாட்டை இன்னும் காரமாக செய்வது எப்படி?
நீங்கள் காரத்தை விரும்புபவர் என்றால் நீங்கள் கூடுதலாக ஒன்று
அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்களது காரத்திற்கேற்ப அரை அல்லது ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.