Home Tamil மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்

0 comment
Published under: Tamil
மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ் மிகவும் சுவையான உணவு. இதை வெகு எளிதில் மிகுந்த சிரமம் இன்றி செய்து முடித்து விடலாம். இவை ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

ப்ரைட் ரைஸ்ஸீக்கு உலகம் முழுவதும் பல நபர்களின் சுவை அரும்புகள் அடிமை என்று எந்தவித தயக்கமும் இன்றி நாம் கூறலாம். பலவிதமான ப்ரைட் ரைஸ்கள் இன்றைக்கு உதயமாகிவிட்டது. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு ஸ்பெஷலான மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்ஸின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Mixed Fried Rice

Mixed Fried Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக நம்மில் பல பேர் ஃப்ரைட் ரைஸ்கள் செய்வதற்க்கு மிக கடினமானவை என்று கருதிக் கொண்டு இருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. என்ன நம்பிக்கை ஏற்பட வில்லையா? நீங்களே இந்த எளிமையான செய்முறை விளக்கத்தை பின்பற்றி இந்த சுவையான மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்ஸை செய்து பார்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசி, வறுத்த சிக்கன், இறால், முட்டை, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் மிளகு தூள், சோயா சாஸ், சில்லி சாஸ் போன்ற சுவையூட்டிகளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கலந்து வெந்து அற்புதமான மணம் மற்றும் சுவையை கொடுக்கும்.

சில குறிப்புகள்:

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

589 – 618 AD யில் சைனாவை சார்ந்த Sui சாம்ராஜ்ஜியத்தில் தான் முதல் முதலாக ஃப்ரைட் ரைஸ் செய்யப்பட்டதாக வரலாற்று  ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஃப்ரைட் ரைஸ்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததினால் இவை உலகம் முழுவதும் இருக்கும் ஹோட்டல் மெனு கார்டுகளில் இடம் பிடிக்க தொடங்கின. வெவ்வேறு சமையல் முறைக்கேற்ப ஃப்ரைட் ரைஸ்களில் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டதினால் இதை வெவ்வேறு பேர் கொண்டு அழைக்கிறார்கள். சிங்கப்பூர் நாட்டில் இதை Nasi goreng என்றும், கியூபா நாட்டில் இதை Arroz frito என்றும், தாய்லாந்து நாட்டில் இதை Khao phat என்றும், பெரு நாட்டில் இதை Arroz chaufa என்றும், ஈக்குவேடார் நாட்டில் இதை Chaulafan என்றும், மற்றும் போட்டோ ரிக்கோ நாட்டில் இதை Arroz mamposteao என்றும் அழைக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்ஸை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்ஸை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் இதில் உபயோகிக்கும் சிக்கனில் புரத சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், விட்டமின் B 12, மற்றும் B 6 உள்ளது. இவை இதய மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை, மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் இறாலில் புரத சத்து, கொழுப்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், அயோடின், மற்றும் செலினியம் உள்ளது. இவை இதய மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் பீன்ஸில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் B 6 உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

நாம் இதில் சேர்க்கும் குடை மிளகாயில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

Mixed Fried Rice
No ratings yet

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ் மிகவும் சுவையான உணவு. இதை வெகு எளிதில் மிகுந்த சிரமம் இன்றி செய்து முடித்து விடலாம். இவை ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time20 minutes
Cook Time25 minutes
Total Time45 minutes
Course: Main Course
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 250 g வறுத்த போன்லெஸ் சிக்கன்
  • 250 g வறுத்த இறால்
  • 3 முட்டை
  • 1/4 cup பீன்ஸ்
  • 1/4 cup கேரட்
  • 1 வெங்காயம்
  • 1/2 பச்சை குடை மிளகாய்
  • 1/2 சிவப்பு குடை மிளகாய்
  • 1 tsp பூண்டு
  • 1 tsp இஞ்சி
  • 1 tsp சில்லி சாஸ்
  • 1/4 எலுமிச்சை சாறு
  • தேவையான அளவு மிளகு தூள்
  • தேவையான அளவு தேவையான அளவு சோயா சாஸ்
  • தேவையான அளவு தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தேவையான அளவு எள் எண்ணெய்
  • தேவையான அளவு வெங்காய தாள்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து சிக்கன் மற்றும் இறாலை நன்கு கழுவி தயார் செய்து, பீன்ஸ், கேரட், வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காய தாளை நறுக்கி, மற்றும் எலுமிச்சை சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் கழுவி வைத்திருக்கும் இறாலை போட்டு அதனுடன் அரை மேஜைகரண்டி அளவு மிளகு தூள், அரை மேஜைகரண்டி அளவு சோயா சாஸ், அரை மேஜைகரண்டி அளவு சில்லி சாஸ், மற்றும் அரை மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 15 நிமிடம் வரை ஊற விடவும்.
  • அடுத்து இன்னொரு bowl லை எடுத்து அதில் நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதனுடன் அரை மேஜைகரண்டி அளவு மிளகு தூள், ஒரு மேஜைகரண்டி அளவு சோயா சாஸ், அரை மேஜைகரண்டி அளவு சில்லி சாஸ், மற்றும் அரை மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 15 நிமிடம் வரை ஊற விடவும்.
  • அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து சில் செய்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு எள் எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் இறாலை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் நான்கில் இருந்து ஐந்து நிமிடம் வரை வறுத்தெடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் அதே pan னில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு எள் எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் நான்கில் இருந்து ஐந்து நிமிடம் வரை வறுத்தெடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் அதே pan னில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு எள் எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுடுவதற்க்குள் ஒரு bowl லை எடுத்து அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி அதை நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் அடித்து வைத்திருக்கும் முட்டைகளை ஊற்றி அதை சுமார் நான்கில் இருந்து ஐந்து நிமிடம் வரை வதக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அதே pan னில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எள் எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், மற்றும் குடை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கன் மற்றும் இறாலை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் வதக்கி எடுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காய தாளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து சாதம் உடைந்து விடாதவாறு பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு கலந்த விடவும்.
  • அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ் தயார்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்ஸை நாம் செய்ய கட்டாயம் எள் எண்ணெய்யை தான் பயன்படுத்த வேண்டுமா?

கட்டாயம் ஏதும் கிடையாது. நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்யை கொண்டே செய்யலாம். எள் எண்ணெய் மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் சற்று ஆரோக்கியமானது என்பதினால் அதை பயன்படுத்தினால் நல்லது.

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்ஸை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் வேண்டுமென்றால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மேஜைகரண்டி அளவு மிளகு தூளை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக ஒரு மேஜைகரண்டி அளவு சில்லி சாஸை சேர்த்துக் கொள்ளலாம்.

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்க்கு எந்தெந்த சைடிஷ்கள் உகந்ததாக இருக்கும்?

மிக்ஸட் ஃப்ரைட் ரைஸ்ஸில் நாம் கேரட் மற்றும் பீன்சுடன் முட்டைகோசை சேர்த்துக் கொள்ளலாமா?

உங்களுக்கு முட்டைகோஸ் மிகவும் விருப்பம் என்றால் நீங்கள் தாராளமாக அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter