புலாவ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உணவு பிரியர்கள் மட்டும் இன்றி பலராலும் இவை விரும்பி உண்ண படக்கூடிய ஒரு உணவு என்றால் அது மிகையல்ல. புலாவில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகவும் சுவையான மற்றும் சத்தான பீஸ் பன்னீர் புலாவ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பீஸ் பன்னீர் புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
பொதுவாக நாம் சைவப் பிரியராக இருந்தால் பண்டிகை நாட்கள் அல்லது பிறந்த நாள் விழாக்களின் போது வெஜிடபிள் பிரியாணி அல்லது வெஜிடபிள் பிரிஞ்சி அல்லது வெஜிடபிள் புலாவ் போன்ற உணவுகளை தான் நாம் தேர்ந்தெடுத்து சமைத்து நம் விருந்தினர்களுக்கு பரிமாறி சுவைத்து மகிழ்ந்திருப்போம். நாம் வழக்கமாக செய்யும் இந்த உணவுகளுக்கு பீஸ் பன்னீர் புலாவ் ஒரு நல்ல மாற்று. இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
பீஸ் பன்னீர் புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசி, பன்னீர், பச்சை பட்டாணி, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, போன்றவை நாம் சேர்க்கும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், சீரகம், கரம் மசாலா, பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மற்றும் ஜாதிபத்ரி போன்ற மசாலா பொருட்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து வெந்து சுவை அரும்புகள் கொண்டாடும் அற்புதமான சுவை மட்டுமல்ல நுகர்ச்சி மண்டலமும் சிலிர்க்கும் அட்டகாசமான மணமும் ஏற்படுத்தும்.
சில குறிப்புகள்:
பன்னீரை நறுக்கிய உடன் மசாலாவில் ஊற வைத்தால் நன்கு பிரஷ்ஷாக இருக்கும்.
இவ் உணவின் வரலாறு:
புலாவ் எட்டாம் நூற்றாண்டில் Abbasid சாம்ராஜ்யத்தில் உதயமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் இவை வெறும் சாதம் மற்றும் மாமிச இறைச்சிகளை கொண்டு செய்யப்பட்டிருக்கின்றன. மெல்ல மெல்ல இவை உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய பிறகு மக்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் சமையல் முறை கேற்ப புலாவை சிறுசிறு மாற்றங்களோடு செய்து சுவைக்க தொடங்கி இருக்கின்றனர்.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
பீஸ் பன்னீர் புலாவை செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.
இதை சமைக்க சுமார் 35 லிருந்து 40 நிமிடம் எடுக்கும்.
பீஸ் பன்னீர் புலாவை முழுமையாக சுமார் 55 நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் நாலில் இருந்து ஐந்து பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
பீஸ் பன்னீர் புலாவை ஒரு நாள் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.
இதை ஒற்றிய உணவுகள்:
- வெஜிடபிள் புலாவ்
- ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ்
- காஷ்மீரி வெஜிடபிள் புலாவ்
- புதினா புலாவ்
- மஷ்ரூம் புலாவ்
- பன்னீர் புலாவ்
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
பீஸ் பன்னீர் புலாவில் சேர்க்கப்படும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.
இதில் நாம் பயன்படுத்தும் பன்னீரில் புரத சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், விட்டமின் D, மற்றும் விட்டமின் B 12 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் ரத்த அழுத்தத்தை சீர் செய்ய பயன்படுகிறது.
நாம் இதில் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, விட்டமின் K மற்றும் A உள்ளது.
இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.
இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.
நாம் இதில் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் நார் சத்து, புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, சிங்க், விட்டமின் C மற்றும் B 6 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண், மற்றும் கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பீஸ் பன்னீர் புலாவ்
தேவையான பொருட்கள்
- 2 cup பாசுமதி அரிசி
- 1 cup பச்சை பட்டாணி
- 400 g பன்னீர்
- 3 தக்காளி
- 2 வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 2 tsp தயிர்
- 1/4 tsp மஞ்சள் தூள்
- 2 tsp மிளகாய் தூள்
- 1 tsp மல்லி தூள்
- 1 tsp சீரக தூள்
- 1 tsp சீரகம்
- 2 tsp கரம் மசாலா
- 7 பல் பூண்டு
- 1 சிறுதுண்டு இஞ்சி
- 2 பிரியாணி இலை
- 3 ஏலக்காய்
- 2 இலவங்கப்பட்டை
- 7 கிராம்பு
- 1 நட்சத்திர சோம்பு
- 1 ஜாதிபத்ரி
- தேவையான அளவு புதினா
- தேவையான அளவு கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
- முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, மற்றும் பன்னீரை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு மிளகாய் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு கரம் மசாலா, மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- நெய் சுட்டதும் அதில் நம் ஊற வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து வறுக்கவும்.
- பின்பு சீரான இடைவெளியில் அவைகளை திருப்பி போட்டு எல்லா பக்கமும் நன்கு வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- நெய் சுட்டதும் அதில் சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மற்றும் ஜாதிபத்ரியை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
- அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ரெண்டு நிமிடம் வரை வதக்கவும்.
- ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- அடுத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு மிளகாய் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு கரம் மசாலா, சீரக தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அதைத்தொடர்ந்து அதில் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் சுமார் ரெண்டே கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி போட்டு அதை சரியாக ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே சுமார் பத்து நிமிடம் வரை வைக்கவும்.
- பத்து நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து உங்கள் அட்டகாசமான பீஸ் பன்னீர் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
பீஸ் பன்னீர் புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை நாம் பயன்படுத்தலாமா?
உங்களுக்கு சீரக சம்பா அரிசி தான் பிடிக்கும் என்றால் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பீஸ் பன்னீர் புலாவிற்கு உகந்த சைடிஷ்கள் என்னென்ன?
பீஸ் பன்னீர் புலாவ் எந்தவித சைடிஷ்களும் இன்றி அப்படியே உண்பதற்கே நன்றாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு சைடிஷ் வேணும் எனில் பன்னீர் பட்டர் மசாலா, மஷ்ரூம் கிரேவி, மஷ்ரூம் மஞ்சூரியன், மற்றும் பன்னீர் 65 அட்டகாசமாக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சிக்கன் 65 அல்லது சிக்கன் லாலிபாப் போன்ற சைடிஷ்களுடனும் இதை உண்ணலாம்.
பீஸ் பன்னீர் புலாவை இன்னும் ஸ்பைசியாக மாற்றுவது எப்படி?
உங்களுக்கு காரம் அதிகம் வேண்டும் என்றால் கூடுதலாக ரெண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.
பீஸ் பன்னீர் புலாவில் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நாம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாமா?
சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் புலாவின் சுவை சற்று வெஜிடபிள் பிரிஞ்சி போல் மாறிவிடும். அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.