Home Tamil மஷ்ரூம் ரைஸ்

மஷ்ரூம் ரைஸ்

0 comments
Published under: Tamil
மஷ்ரூம் ரைஸ் மிகவும் சுவையான மற்றும் சத்தான உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

எப்பொழுதுமே வித்தியாசமான ஒரு உணவை நாம் செய்து சுவைக்க வேண்டும் என்று நம்மில் பல பேரின் எண்ணமாக இருக்கும். அந்த எண்ணம் நிறைவேறும் வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான மஷ்ரூம் ரைஸ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான மஷ்ரூம் ரைஸ் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Mushroom Rice / மஷ்ரூம் ரைஸ்
Mushroom Rice / மஷ்ரூம் ரைஸ்

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

நாம் பண்டிகை நாளோ அல்லது பிறந்தநாள் விழாக்களின் போது  சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, வெஜிடபிள் புலாவ் போன்ற உணவுகளை நாம் வழக்கமாக செய்து நாம் விருந்தினர்களை அசத்தி இருப்போம். அந்த வழக்கமான உணவுகளுக்கு இந்த மஷ்ரூம் ரைஸ் ஒரு சிறந்த மாற்று. உங்கள் விருந்தினர்கள் இந்த சுவையான மஷ்ரூம் ரைசையை பார்த்து நிச்சயம் அசந்து போவார்கள். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நாம் இதில் சேர்க்கும் பாசுமதி அரிசி, மற்றும் மஷ்ரூம், நாம் சேர்க்கும் ரெட் சில்லி ஃப்ளெக்ஸ்,  இத்தாலியன் சீசனிங், மிளகு தூள், மற்றும் உப்பு போன்ற சுவையூட்டிகள் நன்கு காய்கறி சாறுடன் ஊறி மிக சுவையாக அட்டகாசமாக இருக்கும். இவை நம் நாவில் படும்போது அற்புதமான ஒரு மறக்க முடியாத உணவை உண்ணும் அனுபவத்தை நமக்கு தரும்.

சில குறிப்புகள்:

மஷ்ரூமை சேர்ப்பதற்கு முன்பாக பிரஷ்ஷாக நறுக்கி சேர்க்கவும். அப்படி சேர்த்தால் மஷ்ரூம் சுருண்டு விடாமல் நன்கு பிரஷ்ஷாக சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

மஷ்ரூம் ரைஸ் பெர்சியா இன்றைய ஈரான் நாட்டில் 750 – 940 ஆம் காலகட்டத்தில் Abbasid Caliphate சாம்ராஜ்யத்தின் போது உதயமானதாக கூறப்படுகிறது. இவை ஈரானில் Rice Pilaf என்கின்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அந்நாட்டிலிருந்து  மத்திய கிழக்கு, ஆசியா, மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்த மக்களால் மஷ்ரூம் ரைஸ் அங்கும் பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறது. இன்று உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களால் செய்து சுவைக்கப்படும் ஒரு உணவாக இந்த மஷ்ரூம் ரைஸ் மாறி இருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

மஷ்ரூம் ரைஸ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 25 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

மஷ்ரூம் ரைஸ்ஸை முழுமையாக சுமார் 35 நிமிடத்தில் இருந்து 40 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் ரெண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

மஷ்ரூம் ரைஸ் செய்வதற்கு நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் இதில் பயன்படுத்தும் மஷ்ரூமில் புரத சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களுக்கு நல்லது.

நாம் சேர்க்கும் முட்டைக்கோஸில் நார் சத்து, கால்சியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதயத்திற்கு நல்லது மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் ப்ரோக்கோலியில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் K மற்றும் C உள்ளது. இவை இதயம் மற்றும் கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Mushroom Rice / மஷ்ரூம் ரைஸ்
No ratings yet

மஷ்ரூம் ரைஸ்

மஷ்ரூம் ரைஸ் மிகவும் சுவையான மற்றும் சத்தான உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time15 minutes
Cook Time25 minutes
Total Time40 minutes
Course: Main Course
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 600 grams மஷ்ரூம்
  • 1 cup பாசுமதி அரிசி
  • 5 வெங்காயம்
  • 2 கேரட்
  • 7 பீன்ஸ்
  • 1/4 முட்டைகோஸ்
  • 1 cup ப்ரோக்கோலி
  • 1 bowl செலரி
  • 23 பல் பூண்டு
  • 1 பிரியாணி இலை
  • 2 tsp ரெட் சில்லி ஃப்ளெக்ஸ்
  • 3 tsp இத்தாலியன் சீசனிங்
  • 2 tsp உப்பு
  • தேவையான அளவு மிளகு தூள்
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு வெண்ணெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இப்பொழுது வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ப்ரோக்கோலி, செலரி, பூண்டு மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை குறைந்த சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 3 வெங்காயம், மற்றும் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ப்ரோக்கோலி, செலரி, மற்றும் 20 பல் பூண்டை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் ஒரு ஸ்பூன் அளவு உப்பு, ஒரு ஸ்பூன் அளவு மிளகு தூள், மற்றும் ஒரு லிட்டருக்கும் சற்று அதிகமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 30 நிமிடம் வரை வேக விடவும்.
  • 30 நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் இருக்கும் காய்கறிகளை தனியாக எடுத்து அந்த காய்கறி சாறை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு வெண்ணெய் சேர்த்து அதை உருக்கவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 100 grams மஷ்ரூமை போட்டு அது நன்கு வெந்து அதில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை அதை நன்கு வதக்கி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பெரிய பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 1/4 கப் அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை உருக விடவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம் மற்றும் 3 பல் பூண்டை போட்டு சுமார் இரண்டில் இருந்து மூன்று நிமிடம் வரை அதை வதக்கவும்.
  • 3 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 500 grams மஷ்ரூமை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவு உப்பு, ஒரு ஸ்பூன் அளவு மிளகு தூள், ரெட் சில்லி ஃப்ளெக்ஸ், மற்றும் இத்தாலியன் சீசனிங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை இதில் சேர்த்து அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து நாம் செய்து வைத்திருக்கும் காய்கறி சாறில் இருந்து சுமார் 2 cup அளவு எடுத்து இதில் சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 15 நிமிடத்திற்க்குப் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை திறந்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லிகளை தூவி பக்குவமாக சாதம் உடைந்து விடாமல் கிளறி விட்டு மூடி போட்டு அதை அப்படியே சுமார் 5 நிமிடம் வரை வைக்கவும்.
  • 5 நிமிடத்திற்க்குப் பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் மேலே நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் மஷ்ரூம்களை வைத்து சுட சுட பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

மஷ்ரூம் ரைஸ் செய்ய நாம் பயன்படுத்தும் காய்கறி சாறை நாம் முந்தைய நாள் இரவே செய்து வைத்துக் கொள்ளலாமா?

தாராளமாக செய்து வைத்துக் கொள்ளலாம். செய்து கைப்படாமல் அதை ஒரு கண்டெய்னருக்கு மாற்றி ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

மஷ்ரூம் ரைஸ்க்கு ஏற்ற சைடிஷ் என்னென்ன?

மஷ்ரூம் ரைஸ்ஸில் வேறு ஏதும் காய்கறிகளை நாம் சேர்த்துக் கொள்ளலாமா?

இவை இப்படியே உண்பதற்கு நன்றாக இருக்கும். உங்களுக்கு வேண்டுமென்றால் கேரட் மற்றும் முட்டைகோஸ்ஸை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

மஷ்ரூம் ரைஸ்ஸை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

இதை மிதமான காரத்துடன் உண்டால்தான் நன்றாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு காரம் வேண்டும் என்றால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதலாக ரெட் சில்லி ஃப்ளெக்ஸ்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.

 

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter