Home Tamil சில்லி கார்லிக் காலிஃப்ளவர்

சில்லி கார்லிக் காலிஃப்ளவர்

0 comments
Published under: Tamil
சில்லி கார்லிக் காலிஃப்ளவர் பல உணவுகளுக்கு ஒரு அற்புதமான சைடிஷ். இதை மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் நாம் செய்து சுவைக்கலாம்.

பொதுவாக நாம் உணவுகளுக்கு பல விதமான சைடிஷ் களை செய்து உண்டு மகிழ்ந்திருப்போம். ஆனாலும் எப்பொழுதுமே வித்தியாசமான ஒரு உணவை முயற்சி செய்து பார்த்து உண்ண வேண்டும் என்கின்ற ஆவல் நம்மளுக்கு குறைந்து இருக்கவே இருக்காது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் அசத்தலான சில்லி கார்லிக் காலிஃப்ளவர்.

என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சில்லி கார்லிக் காலிஃப்ளவர் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Chili Garlic Cauliflower / சில்லி கார்லிக் காலிஃப்ளவர்

Chili Garlic Cauliflower / சில்லி கார்லிக் காலிஃப்ளவர்

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்: 

காலிஃப்ளவர் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பெரும்பாலும் நாம் காலிஃப்ளவர்ரை பக்கோடாவாக அல்லது காலிஃப்ளவர் மஞ்சூரியனாக செய்து சுவைத்து இருப்போம். அவைகளுக்கு மாறுதலாக இந்த வித்தியாசமான சில்லி கார்லிக் காலிஃப்ளவர்ரை நாம் செய்து நாம் குடும்பத்தினரை அசத்தலாம். கட்டாயம் இவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.  இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

முதலில் காலிஃப்ளவர்ரை நன்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை சுடு தண்ணீரில் ஊறவைத்து பின்பு அதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மசாலா கலவையில் பிரட்டி பின்பு அதை பக்குவமாக வறுத்து எடுத்து பின்பு அதற்கென்று தனியாக ஒரு கிரேவி செய்து அதனுடன் இந்த வறுத்த காலிஃப்ளவர்ரை போட்டு நன்கு கிளறி தயாராகும் இந்த சில்லி கார்லிக் காலிஃப்ளவர் எப்படி உங்களுக்கு பிடிக்காமல் போகும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

சில குறிப்புகள்: 

காலிஃப்ளவர்ரை போட்டு எடுக்கும் மாவை கலக்கும் போது தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கலக்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால் காலிஃப்ளவருடன் மாவு ஒட்டாது.

ஒருவேளை தண்ணீர் அதிகமாகி விட்டால் அதில் கொஞ்சம் மைதா மாவோ அல்லது சோள மாவோ போட்டு கலந்து அதை சரியான பதத்திற்கு கொண்டு வரவும்.

நாம் வறுத்தெடுக்கும் காலிஃப்ளவர்களை ஒரு டிஷ்யூ பேப்பரின் மீது வைத்தால், காலிஃப்ளவர் அதிகம் எண்ணெய் குடித்து இருந்தால் அதை இந்த டிஷ்யூ பேப்பர் எடுத்து விடும்.

இவ் உணவின் வரலாறு: 

சில்லி கார்லிக் காலிஃப்ளவர் ஒரு Indo – Chinese உணவு முறையாகும். காலிஃப்ளவர் 2000 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் இருந்தாலும் இந்தியாவிற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாக வந்ததாக தான் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த சில்லி கார்லிக் காலிஃப்ளவர் தென் ஆசியாவில் உதயமாகி தற்போது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கிறது. இதை ஒட்டி ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின் நாட்டில் செய்யப்படும் ஸ்பானிஷ் கார்லிக் காலிஃப்ளவர் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

சில்லி கார்லிக் காலிஃப்ளவர் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 35 லிருந்து 40 நிமிடம் எடுக்கும்.

சில்லி கார்லிக் காலிஃப்ளவர்ரை முழுமையாக சுமார் 50 நிமிடத்தில் இருந்து 55 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் ரெண்டில் இருந்து மூன்று பேருக்கு தாராளமாக பரிமாறலாம்.

சில்லி கார்லிக் காலிஃப்ளவர்ரை ஒரு நாள் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்: 

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்: 

சில்லி கார்லிக் காலிஃப்ளவர் செய்ய நாம் உபயோகிக்கும் காலிஃப்ளவரில் நார் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் C, K, மற்றும் B6 உள்ளது.

இதில் நாம் சேர்க்கும் மைதா மாவில் கார்போஹைட்ரேட், நார் சத்து, மற்றும் புரத சத்து இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் சோள மாவில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம், மற்றும் கால்சியம் உள்ளது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் தேனில் பொட்டாசியம், சோடியம், மற்றும் இரும்பு சத்து இருக்கிறது.

 

Chili Garlic Cauliflower / சில்லி கார்லிக் காலிஃப்ளவர்
5 from 1 vote

சில்லி கார்லிக் காலிஃப்ளவர்

சில்லி கார்லிக் காலிஃப்ளவர் பல உணவுகளுக்கு ஒரு அற்புதமான சைடிஷ். இதை மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் நாம் செய்து சுவைக்கலாம்.
Prep Time15 minutes
Cook Time40 minutes
Total Time55 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian, Indo-Chinese

தேவையான பொருட்கள்

  • 1 காலிஃப்ளவர்
  • 1/2 cup மைதா மாவு
  • 1 வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 6 tsp சோள மாவு
  • 2 tsp மிளகாய் தூள்
  • 1 tsp சில்லி ஃப்ளெக்ஸ்
  • 2 tsp மிளகு தூள்
  • 1 tsp வினிகர்
  • 2 tsp சோயா சாஸ்
  • 3 tsp டொமேட்டோ கெட்ச்சப்
  • 2 tsp தேன்
  • 2 tsp உப்பு
  • தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் காலிஃப்ளவர்ரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை சுடு தண்ணீரில் போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  • இப்பொழுது வெங்காயம், பூண்டு, மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஐந்து நிமிடம் கழித்து காலிஃப்ளவர்ரில் இருக்கும் தண்ணீரை நன்கு வடித்து அதை டிஷ்யூ பேப்பரில் போட்டு உலர விடவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு, 4 tsp சோள மாவு, 1 tsp மிளகாய் தூள், 1 tsp மிளகு தூள், மற்றும் 1 tsp உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் கவனமாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை காலிஃப்ளவர் உடன் ஒட்டும் பதத்திற்கு கொண்டு வரவும்.
  • இப்பொழுது நாம் ஆற வைத்திருக்கும் காலிஃப்ளவர்ரை எடுத்து இதில் போட்டு மாவு அனைத்து காலிஃப்ளவர் துண்டுகளிலும் படுமாறு கிளறி விடவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த காலிஃப்ளவரை போட்டு வறுத்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் கவனமாக இந்த காலிஃப்ளவர்களை போட்டு அது நன்கு பொன் நிறமாகும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 tsp அளவு எண்ணெய் விட்டு அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு சுமார் அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ரெண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  • ரெண்டு நிமிடத்திற்கு பிறகு அதில் 1 tsp உப்பு, 1 tsp மிளகாய் தூள், சில்லி ஃப்ளெக்ஸ், மற்றும் 1 tsp மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அடுப்பை குறைத்து வைத்து அதில் வினிகர், சோயா சாஸ், மற்றும் டொமேட்டோ கெட்ச்சப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • இப்பொழுது 2 tsp அளவு சோள மாவை தண்ணீரில் கலந்து அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கலந்து விடவும்.
  • ஒரு நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் காலிஃப்ளவர்ரை போட்டு அந்த கிரேவி அனைத்து காலிஃப்ளவர்கள் மீதும் படுமாறு நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதில் தேன் மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி நன்கு கிளறி விடவும்.
  • அவ்வளவுதான் உங்கள் அற்புதமான சில்லி கார்லிக் காலிஃப்ளவர் ரெடி. இதை சுட சுட உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்: 

சில்லி கார்லிக் காலிஃப்ளவர்ரில் கூடுதலாக நாம் குடை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாமா?

உங்களுக்கு விருப்பம் என்றால் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

சில்லி கார்லிக் காலிஃப்ளவர்ரை இன்னும் ஸ்பைசியாக மாற்றுவது எப்படி?

அவரவர் விருப்பத்திற்கேற்ப கூடுதலாக மிளகாய் தூள் அல்லது சில்லி ஃப்ளெக்ஸ்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.

சில்லி கார்லிக் காலிஃப்ளவர் செய்ய நாம் பயன்படுத்தும் தேனை தவிர்த்து விடலாமா?

தேனின் சுவை தனியாக தெரியாது. இருப்பினும் உங்களுக்கு தேன் பிடிக்காது என்றால் தவிர்த்து விடலாம்.

சில்லி கார்லிக் காலிஃப்ளவர் எந்த உணவிற்கு நல்ல சைடிஷ் ஆக இருக்கும்? 

ஃபிரைட் ரைஸ் மற்றும் சப்பாத்திக்கு இவை சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். தக்காளி சாதத்துடனும் சேர்த்து உண்பதற்க்கு இவை நன்றாக இருக்கும்.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter