Home Tamil சோயா சங்க் கட்லெட்

சோயா சங்க் கட்லெட்

0 comments
Published under: Tamil
இதைநாம் நம் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம் அவர்களும் இதை கட்டாயம் மிகவும் விரும்பிஉண்பார்கள்

கட்லட் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. சமோசா, பஜ்ஜி, போண்டா, பப்ஸ், வடை போன்ற பல வகையான மாலை நேர சிற்றுண்டிகள் இருந்தாலும் கட்லெட்டுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான சோயா சங்க் கட்லெட்.

Soya Chunks Cutlet / சோயா சங்க் கட்லெட்

Soya Chunks Cutlet / சோயா சங்க் கட்லெட்

சோயா சங்க் கட்லெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் சோயா சங்க்குகளை பயன்படுத்தி செய்வதால் இவை நம் உடம்பிற்கு நல்லது. அதனால் இதை நாம் நம் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம் அவர்களும் இதை கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி இதை செய்வதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் நாம் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம்.

இப்பொழுது கீழே சோயா சங்க் கட்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Soya Chunks Cutlet / சோயா சங்க் கட்லெட்
5 from 1 vote

சோயா சங்க் கட்லெட்

இதைநாம் நம் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம் அவர்களும் இதை கட்டாயம் மிகவும் விரும்பிஉண்பார்கள்
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Snack
Cuisine: Tamil, Tamil Nadu
Keyword: soya chunks cutlet

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் சோயா சங்க்
  • 4 பிரட்
  • 4 to 5 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 3 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 1 மேஜைக்கரண்டி ரவை
  • ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • 1 மேஜைக்கரண்டி சாட் மசாலா
  • ½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோயா சங்குகளை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு போட்டு அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் சோயா சங்குகளை போட்டு அதை சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  • பின்னர் பிரட்களை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster யின் மூலமாகவோ toast செய்து அரைத்து கொள்ளலாம்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல்போட்டு அதை நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சோயா சங்குகளை எடுத்து அதை நன்றாக பிழிந்து அதில் இருக்கும் தண்ணியை முற்றிலுமாக எடுத்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், கருப்பு மிளகு தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் அரைத்து வைத்திருக்கும் சோயா சங்க்குகளை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சாட் மசாலா மற்றும் கரம் மசாலாவை தூவி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு மசாலாவை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் சோள மாவை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு நாம் செய்து வைத்திருக்கும் bread crumbs ஐ எடுத்து அதில் ரவையை சேர்த்து அதை நன்கு கலந்து கொள்ளவும். (ரவை பிடிக்காதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
  • பின்பு நாம் வதக்கி வைத்திருக்கும் சோயா சங்க் கலவை ஆறியதும் அதை அவரவருக்கு விருப்பமான வடிவில் பிடித்து அதை நாம் கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை bread crumbs ல் போட்டு நன்கு உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள சோயா சங்க் கலவையையும் செய்து தட்டில் வைத்து பின்பு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் கட்லெட்டை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் கட்லெட்டை எடுத்து பக்குவமாக போட்டு அதை பொரிக்கவும்.
  • பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான சோயா சங்க் கட்லெட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter