Home Tamil கார்ன் ஃப்ரை

கார்ன் ஃப்ரை

0 comments
Published under: Tamil
குழந்தைகளுக்கு மாலைநேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் அதை அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள்.

பொதுவாக நாம் பலவிதமான மாலை நேர சிற்றுண்டிகளை செய்து சுவைத்திருப்போம். அதில் சில சிற்றுண்டிகள் நமக்கு அலுத்தே போயிருக்கலாம். அதனால் நாம் இன்று இங்கு ஒரு வித்தியாசமான கார்ன் ஃப்ரை என்கிற மாலை நேர சிற்றுண்டியை காண இருக்கிறோம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிக்கு இவை ஒரு அருமையான மாற்று என்றால் அது மிகை அல்ல.

கார்ன் ஃப்ரை / Corn Fry

கார்ன் ஃப்ரையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெறும் சோள விதைகள், சோள மாவு, மற்றும் அரிசி மாவை வைத்தே செய்து விடலாம். அது மட்டுமின்றி இவை செய்வதற்கும் மிகவும் எளிமையானவையும் கூட. மேலும் இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. நம் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது நாம் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் அதை அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள்.

இப்பொழுது கீழே கார்ன் ஃப்ரை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

கார்ன் ஃப்ரை / Corn Fry
5 from 1 vote

கார்ன் ஃப்ரை

குழந்தைகளுக்கு மாலைநேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் அதை அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள்.
Prep Time10 minutes
Cook Time10 minutes
Total Time20 minutes
Course: Appetizer, Snack
Cuisine: South Indian, Tamil, Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 2 கப் சோள விதைகள்
  • 4 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 4 மேஜைக்கரண்டி அரிசி மாவு
  • 1 கப் மயோனைஸ்
  • 3 மேஜைக்கரண்டி ஸ்செஷ்வான் சாஸ்
  • 1 சிட்டிகை கருப்பு மிளகு தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

செய்முறை

  • முதலில் சோள விதைகளை தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து பின்பு ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோள விதைகளை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்ட பின் அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை தூவி பின்பு நாம் எடுத்து வைத்திருக்கும் சோள விதைகளை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதிலிருக்கும் தண்ணீரை நன்கு வடித்து சோள விதைகளை ஒரு தட்டில் போட்டு பரப்பி விட்டு அதை சிறிது நேரம் ஆற விடவும்.
  • சோள விதைகள் ஆறியதும் அதை ஒரு bowl ல் போட்டு அதில் கருப்பு மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பை தூவி அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் சோள மாவு மற்றும் அரிசி மாவை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி அதை மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • பிறகு அதை அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் இருக்க விடவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் ஒரு கப் அளவு மயோனைஸ் மற்றும் ஸ்செஷ்வான் சாஸை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோள விதைகளை போட்டு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் சோள விதைகளை எடுத்து கடாயின் அளவிற்கேற்ப பக்குவமாக போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை பொரிக்கவும். (எண்ணெய் கைகளில் தெறித்து விடாமல் பார்த்து கொள்ளவும்.)
  • அது நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள சோள விதைகளையும் எண்ணெய்யில் பக்குவமாக போட்டு பொரித்து எடுத்து தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அனைத்து சோள விதைகளையும் பொரித்து எடுத்து தட்டில் வைத்த பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் மயோனைஸ் மற்றும் ஸ்செஷ்வான் சாஸை மேலே ஊற்றி சிறிதளவு ஸ்பிரிங் ஆனியனை தூவி அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான கார்ன் ஃப்ரை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter