Home Tamil சிக்கன் சுக்கா

சிக்கன் சுக்கா

0 comments
Published under: Tamil
இருக்கும்கர்நாடக மாநிலத்தில் உதயமானது என கூறப்படுகிறது. சிக்கன் சுக்காவை பொதுவாக பரோட்டா, நாண், சப்பாத்தி, புல்கா, மற்றும் தோசைக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள்.

சிக்கன் சுக்கா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சைடிஷ் உணவு. சிக்கன் பிரியர்களுக்கு இவை மிகவும் பிடித்தமான ஒன்று. இவை இந்தியாவில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் உதயமானது என கூறப்படுகிறது. சிக்கன் சுக்காவை பொதுவாக பரோட்டா, நாண், சப்பாத்தி, புல்கா, மற்றும் தோசைக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இவை நாம் வெறும் சாதத்தில் போட்டு உண்ணவும் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

Chicken Sukka / சிக்கன் சுக்கா

சிக்கன் சுக்காவை செய்வதற்கு நீண்ட செய்முறை இருந்தாலும் அவை மிகவும் எளிமையானவை தான். சமைக்க கற்று கொண்டு இருப்பவர்கள் கூட கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை அப்படியே பின்பற்றி செய்தால் இதை மிக எளிதாக செய்து விடலாம். அது மட்டுமின்றி நாம் வழக்கமாக செய்து உண்ணும் சைடிஷ்களுக்கு இவை ஒரு நல்ல மாற்றும் கூட.

இப்பொழுது கீழே சிக்கன் சுக்கா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Sukka
4.50 from 2 votes

சிக்கன் சுக்கா

இருக்கும்கர்நாடக மாநிலத்தில் உதயமானது என கூறப்படுகிறது. சிக்கன் சுக்காவை பொதுவாக பரோட்டா, நாண், சப்பாத்தி, புல்கா, மற்றும் தோசைக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: South Indian, Tamil

தேவையான பொருட்கள்

  • 750 கிராம் சிக்கன்
  • பெரிய வெங்காயம்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 4 to 5 பல் பூண்டு
  • 8 to 10 காஞ்ச மிளகாய்
  • 1 துண்டு பட்டை
  • 3 to 4 கிராம்பு
  • 8 to 10 கருப்பு மிளகு
  • ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜைக்கரண்டி வெந்தயம்
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி மல்லி விதைகள்
  • 1 மேஜைக்கரண்டி கசகசா
  • சின்ன நெல்லிக்காய் சைஸ் புளி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, ஒரு பூண்டை பொடியாக நறுக்கி, தேங்காயை துருவி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு புளியை தண்ணீரில் நன்கு கரைத்து அதை சுமார் 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி தண்ணியை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பட்டை, கருப்பு மிளகு, கிராம்பு, வெந்தயம், சீரகம், மல்லி விதை, மற்றும் கசகசாவை போட்டு அது நன்கு வாசம் வரும் வரை அதை வறுக்கவும்.
  • நன்கு வாசம் வந்ததும் அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் அதை ஆற விடவும்.
  • பின்னர் அதே pan ல் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வறுத்து எடுத்து அதையும் தட்டில் போட்டு பரப்பி விட்டு நன்கு ஆற விடவும்.
  • பிறகு அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
  • பின்பு அதே pan ல் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அது லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கி பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு ஆற விடவும்.
  • நெய் உருகியதும் ஆதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அரை வெங்காயம் மற்றும் 3 லிருந்து 4 பூண்டை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு அதையும் ஆற விடவும்.
  • அடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் அனைத்தும் நன்கு ஆறியதை உறுதி செய்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளி தண்ணீரில் இருந்து ஒரு மேஜைக்கரண்டி, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வெங்காயம் லேசாக பொன்னிறம் ஆகும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் லேசாக பொன்னிறமானதும் அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிக்கன் நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 12 லிருந்து 14 நிமிடம் வரை வேக விடவும்.
  • 14 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை தூவி அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சப்பாத்தியுடனோ அல்லது நான்வுடனோ அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
4.50 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter