கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. அதனாலேயே கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ் கிடைக்காத பீட்சா கடைகளை நாம் காண்பது மிகவும் அரிது. கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ் உலகம் முழுவதும் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு செய்யப்படுகிறது.
பொதுவாக கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ்ஸை விரும்பி உண்பவர்கள் இதை கடைகளில் வாங்கி தான் சுவைக்கிறார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது இதை நாம் வீட்டிலேயே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம் என்று. மேலும் இதை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறைகளை அப்படியே பின்பற்றி செய்தால் நாம் வீட்டிலேயே கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ்ஸை செய்து சுவைக்கலாம்.
கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் பிரட், வெண்ணெய், பூண்டு, சோள விதைகள், மற்றும் குடை மிளகாய் இருந்தால் போதும் இதை நாம் செய்து விடலாம். இதை நாம் குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ் ஒரு அட்டகாசமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட. குறைந்த நேரத்திலேயே செய்து நம் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது நம் அலுவலகங்களுக்கோ எடுத்து செல்ல இவை ஒரு உகந்த உணவு.
இப்பொழுது கீழே கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கார்லிக் சீஸ் பிரட் ஸ்டிக்ஸ்
தேவையான பொருட்கள்
- 4 சாண்ட்விட்ச் பிரட்
- 100 கிராம் வெண்ணெய்
- 1 குடை மிளகாய்
- 4 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
- 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்
- 2 மேஜைக்கரண்டி oregano mix
- தேவையான அளவு சோள விதைகள்
- தேவையான அளவு சீஸ்
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் குடை மிளகாய், பூண்டு, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நறுக்கிய கொத்தமல்லி, வெண்ணெய், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்ஸை சேர்த்து அதை நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
- பிறகு 2 சாண்ட்விச் பிரட்டை எடுத்து அதன் ஒரு புறம் நாம் செய்து வைத்திருக்கும் வெண்ணெய் கலவையை ஒரு கத்தியின் மூலம் நன்கு பரப்பி தடவி விடவும். (வெண்ணெய் கலவையை சிறிதளவு தடவினால் போதும் அதிகமாக தடவி விடக்கூடாது.)
- பின்னர் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப சீஸ்ஸை, சோள விதைகள், மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை வைத்து அதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து அதன் மேலே கையை வைத்து லேசாக அழுத்தி விடவும்.
- அடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் பிரட்டின் வெளிப்புறத்திலும் நாம் செய்து வைத்திருக்கும் வெண்ணெய் கலவையை தடவி அதை தயாராக ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறே மீதமுள்ள 2 சாண்ட்விச் பிரட்களையும் தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதை சுட வைக்கவும்.
- Pan சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாண்ட்விச்சை எடுத்து வைத்து அதை நன்கு பொன்னிறமாகும் வரை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும். (சாண்ட்விட்ச் மேக்கர் இருந்தால் pan க்கு பதிலாக நாம் அதிலும் செய்து கொள்ளலாம்.)
- அது வெந்து கொண்டிருக்கும் போதே அதன் மேலே ஒரு மேஜைக்கரண்டி அளவு Oregano mix ஐ போட்டு அதை நன்கு ஒரு கத்தியின் மூலம் பரப்பி விட்டு பின்பு அரை மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை அதில் வைக்கவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் திருப்பி போட்டு மீண்டும் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு கார்லிக் சீஸ் ப்ரெட்டை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை ஒரு கத்தியின் மூலம் பக்குவமாக 4 துண்டுகளாக வெட்டி அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் கார்லிக் சீஸ் ப்ரெட் ஸ்டிக்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.