தக்காளி சூப் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு துவக்க உணவு. இவை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு செய்து மக்கள் சுவைக்கிறார்கள். சூப்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சூப், மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், மற்றும் தக்காளி சூப் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு அட்டகாசமான முறையில் செய்யப்படும் தக்காளி சூப்.
உலகம் முழுவதும் இருக்கும் ரெஸ்டாரன்ட்களில் சைவ உணவை சாப்பிடுபவர்கள் மட்டுமின்றி அசைவ உணவை சாப்பிடுபவர்கள் கூட ஆர்டர் செய்யும் துவக்க உணவுகளில் தக்காளி சூப் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகை அல்ல. நாம் செய்யும் தக்காளி சூப்பில் நாம் துளசி இலைகளை சேர்ப்பதனால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. அது மட்டுமின்றி இந்த தக்காளி சூப்பை நம் குழந்தைகளும் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.
தக்காளி சூப்பை செய்வதற்கு தக்காளி இருந்தால் போதும் இதை நாம் மிக எளிதாக எந்த ஒரு கடினமான செய்முறைகளையும் பின்பற்றாமல் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். சமைக்க தெரியாதவர்கள் கூட கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறைகளை அப்படியே பின்பற்றி செய்தால் தக்காளி சூப்பை முதல் முறையிலேயே வெகு எளிதாக சரியாக செய்து விடலாம்.
இப்பொழுது கீழே தக்காளி சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
தக்காளி சூப்
தேவையான பொருட்கள்
- 5 to 6 தக்காளி
- 1 பல் பூண்டு
- 1 மேஜைக்கரண்டி சோள மாவு
- 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
- 1 மேஜைக்கரண்டி fresh cream
- ¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
- ½ மேஜைக்கரண்டி oregano
- 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்
- 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
- 3 to 4 துளசி இலை
- தேவையான அளவு soup sticks
- தேவையான அளவு தேவையான அளவு உப்பு
- சிறிதளவு வெங்காயத் தாள்
செய்முறை
- முதலில் பூண்டை பொடி பொடியாக நறுக்கி மற்றும் தக்காளியை நன்கு கழுவி ஒரு கத்தியின் மூலம் செங்குத்தாக பாதி அளவு வெட்டி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு ஜாரை எடுத்து அதில் தண்ணீர் பிடித்து அதை fridge ல் வைக்கவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்ததும் அதில் நாம் வெட்டி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு தக்காளியை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதில் நாம் fridge ல் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றவும்.
- பின்னர் தக்காளியின் தோலை உரித்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- பிறகு தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும்.
- பின்பு அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் வடிகட்டி வைத்திருக்கும் தக்காளி சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை சுட வைக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் கருப்பு மிளகு தூள், oregano, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 6 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் 3 லிருந்து 4 துளசி இலையை சேர்த்து அது நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும். (250ml தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். துளசி இலையை விரும்பாதவர்கள் அதை போடாமல் தவிர்த்து விடலாம்.)
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கரைத்து அதை கொதித்து கொண்டிருக்கும் தக்காளி சூப்பில் சேர்த்து நன்கு கலந்து விட்டு சூப் நன்கு கெட்டியாக ஆகும் வரை அதை கொதிக்க விடவும்.
- அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு fresh cream ஐ சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சூப்பை கொதிக்க விடவும்.
- சூப் நன்கு கெட்டியானதும் அதில் சிறிதளவு வெங்காயத் தாளை தூவி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி தக்காளி சூப்பை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் தக்காளி சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.