சிக்கன் கோலா உருண்டை தமிழகத்தில் ஒரு பிரபலமான உணவு. வழக்கமாக நாம் செய்து சுவைக்கும் சிக்கன் உணவுகளை விட சிக்கன் கோலா உருண்டை ஒரு வித்தியாசமான உணவு. இதை நாம் சாதத்தில் ஊற்றியோ அல்லது சாதத்துக்கு சைடிஷ் ஆகவோ நாம் உண்ணலாம். அது மட்டுமின்றி இதை நாம் தோசை, சப்பாத்தி, பரோட்டா, நாண், புல்கா, மற்றும் இடியாப்பத்திற்கு சைடிஷ் ஆக தொட்டு உண்ண சிக்கன் கோலா உருண்டை அட்டகாசமாக இருக்கும்.
இப்பொழுது கீழே சிக்கன் கோலா உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
சிக்கன் கோலா உருண்டை
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பொடியாக நறுக்கிய சிக்கன் துண்டுகள்
- 1 முட்டை
- 4 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 7 பல் பூண்டு
- 2 துண்டு இஞ்சி
- 2 மேஜைக்கரண்டி தயிர்
- 4 to 5 மேஜைக்கரண்டி bread crumbs
- 2 துண்டு பட்டை
- 4 கிராம்பு
- 4 ஏலக்காய்
- ½ மேஜைக்கரண்டி மிளகு தூள்
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் 2 வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிறகு 2 வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
- பின்பு சிக்கனை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து கழுவி பின்னர் அதை பொடியாக நறுக்கி ஒரு bowl ல் போட்டு கொள்ளவும்.
- அடுத்து பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster யின் மூலமாகவோ toast செய்து அதை பொடித்து வைத்து கொள்ளலாம்.
- இப்பொழுது நாம் சிக்கனை போட்டு வைத்திருக்கும் bowl லை எடுத்து அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு பூண்டு, கொத்தமல்லி, மிளகு தூள், பொடித்து வைத்திருக்கும் bread crumbs, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு நம் கைகளில் எண்ணெய் தடவி கொண்டு இந்த சிக்கன் கலவையை சிறிது அளவு எடுத்து அதை உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறு மீதமுள்ள சிக்கன் கலவைகளையும் உருட்டி தட்டில் வைத்த பின்பு அதை சுமார் ஒரு மணி நேரம் வரை fridge ல் வைக்கவும்.
- இப்பொழுது ஒரு தக்காளியை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அது நன்கு பொன் நிறம் வரும் வரை அதை வதக்கி பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- அது ஆறியதும் அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தயிரையும் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கிராம்பு, ஏலக்காய், மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் வறுத்த வெங்காய பேஸ்ட்டை சேர்த்து அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டில் இருந்து 3 மேஜைக்கரண்டி அளவு சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம்வரை அதை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 200ml அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து நாம் fridge ல் வைத்திருக்கும் சிக்கன் உருண்டைகளை எடுத்து அதை கொதித்து கொண்டிருக்கும் மசாலாவுடன் பக்குவமாக சேர்த்து ஒரு மூடி போட்டு அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.
- 7 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிக்கன் உருண்டைகளை பக்குவமாக திருப்பிவிட்டு மீண்டும் மூடி போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
- 20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிக்கன் கோலா உருண்டைகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் மசாலாவுடன் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமான சிக்கன் கோலா உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.