Home Tamil சிக்கன் மலாய் கறி

சிக்கன் மலாய் கறி

0 comments
Published under: Tamil
நாம் வழக்கமாகசெய்து உண்ணும் சைடிஷ்களுக்கு ஒரு அருமையான மாற்று.

சிக்கனை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளும் பொதுவாக உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். பொதுவாக நாம் பலவிதமான சிக்கன் சைடிஷ்களை சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாவிற்கு செய்து சுவைத்து இருப்போம். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது சிக்கன் மலாய் கறி. இவை நாம் வழக்கமாக செய்து உண்ணும் சைடிஷ்களுக்கு ஒரு அருமையான மாற்று.

Chicken Malai Curry

இப்பொழுது கீழே சிக்கன் மலாய் கறி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Malai Curry
5 from 1 vote

சிக்கன் மலாய் கறி

நாம் வழக்கமாகசெய்து உண்ணும் சைடிஷ்களுக்கு ஒரு அருமையான மாற்று.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: Indian, North Indian

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் சிக்கன்
  • 1 கப் தயிர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 to 3 பச்சை மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • 2 மேஜைக்கரண்டி fresh cream
  • 8 to 10 முந்திரி
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்கு பொன் நிறம் ஆகும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு பொன்னிறம் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
  • இப்பொழுது முந்திரி பருப்புகளை எடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு நாம் நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை எடுத்து ஒரு bowl ல் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பேஸ்ட், நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் வரை அதை ஊற விடவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை பக்குவமாக கொட்டி அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை அதை வேக விடவும். (அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வேக விடவும். ஒரு கரண்டியின் மூலம் சிக்கனை நன்கு கிண்டி கொண்டே இருக்கவும்.)
  • இப்பொழுது நாம் வதக்கி ஆற வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்து அதை நன்கு கைகளின் மூலம் நசுக்கி வைத்து கொள்ளவும்.
  • 7 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நசுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை மீண்டும் வேக விடவும். (மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும்.)
  • 6 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அடுப்பை குறைத்து விட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும். (200 லிருந்து 250ml தண்ணீர் சரியாக இருக்கும்.)
  • 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் fresh cream ஐ சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி அதை கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் மலாய் கறியை அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஒரு தட்டில் வைத்து அதை சப்பாத்தி அல்லது நான்வுடன் சுட சுடபரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான சிக்கன் மலாய் கறி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter