பன்னீர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. உணவு பிரியர்கள் மத்தியில் பன்னீரை கொண்டு செய்யப்படும் உணவிற்க்கு என்று ஒரு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா. இவை சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாவிற்கு சைடிஷ் ஆக தொட்டு உண்ண மிகவும் அட்டகாசமாக இருக்கும். அது மட்டுமின்றி இவை ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ்க்கு சைடிஷ்ஷாக உண்ணவும் உகந்தது.
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால் மற்ற பன்னீர் உணவுகளை செய்வது போன்றே இதையும் நாம் எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். பன்னீரை வறுக்கும் போது மட்டும் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் சற்று அதிகம் வறுத்து விட்டாலும் பன்னீர் மிருதுவாக இருக்காது.
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா நாம் வழக்கமாக செய்து உண்ணும் பன்னீர் சைடிஷ்களுக்கு ஒரு அருமையான மாற்று. மேலும் பன்னீரை விரும்பி உண்பவர்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா கட்டாயம் மிகவும் பிடிக்கும். அது மட்டுமின்றி நம் குழந்தைகளும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். மேலும் பன்னீர் உடம்புக்கு மிகவும் நல்லது என்பதால் இதை நம் குழந்தைகளுக்கு எந்தவித ஒரு அச்சமுமின்றி கொடுக்கலாம்.
இப்பொழுது கீழே தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பன்னீர்
- 3 பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- 2 to 3 ஏலக்காய்
- 3 to 4 கிராம்பு
- 1 பட்டை துண்டு
- 1 இஞ்சி துண்டு
- 3 to 4 பல் பூண்டு
- 1 மேஜைக்கரண்டி கடலை மாவு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
- ½ மேஜைக்கரண்டி சீரக தூள்
- ½ மேஜைக்கரண்டி மல்லி தூள்
- ¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு புதினா
செய்முறை
- முதலில் பன்னீர், வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் புதினாவை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சதுரமாக வெட்டி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலா, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை பக்குவமாக நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு அப்படியே சுமார் 30 லிருந்து 35 நிமிடம் வரை ஊற விடவும்.
- பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- அது சுட்ட பின் அதில் சீரகம், ஏலக்காய், கிராம்பு, மற்றும் பட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் அதில் கருப்பு மிளகு தூள், கசூரி மேத்தி, சீரக தூள், மல்லி தூள், கடலை மாவு, அரை மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை ஊற்றி நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.
- 4 நிமிடத்திற்கு பின்னர் மூடியை திறந்து மசாலாவை நன்கு கிண்டி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும்.
- எண்ணெய் பிரிந்து வருவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.
- நெய் உருகியதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் பன்னீரை எடுத்து போட்டு அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் திருப்பி போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை சூடாக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த பன்னீரை வெந்து கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை பக்குவமாக கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.