Home Tamil டிராகன் சிக்கன்

டிராகன் சிக்கன்

0 comments
Published under: Tamil
டிராகன்சிக்கன் ஒரு மாலை நேர உணவாக சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

டிராகன் சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு indo-chinese உணவு. இவை எந்த அளவிற்கு பிரபலம் என்றால் உணவு பிரியர்கள் சில்லி சிக்கனுக்கு அடுத்து தேர்வு செய்யும் ஒரு சிக்கன் உணவாக டிராகன் சிக்கன் தான் இருக்கிறது. வழக்கமாக டிராகன் சிக்கனை உணவு பிரியர்கள் ஃபிரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ், சப்பாத்தி, மற்றும் நான்க்கு சைடிஷ் ஆக உண்கிறார்கள். இவை நாம் தினசரி செய்து உண்ணும் குழம்பு சாதத்திற்கும் மிக அட்டகாசமான சைடிஷ் ஆக இருக்கும். இது மட்டுமின்றி டிராகன் சிக்கன் ஒரு மாலை நேர உணவாக உண்ணவும் மிகவும் உகந்தது.

Dragon Chicken

நாம் வழக்கமாக வீட்டில் செய்து உண்ணும் சிக்கன் உணவுகளுக்கு டிராகன் சிக்கன் ஒரு அருமையான மாற்று. நாம் வழக்கமாக செய்யும் சிக்கன் உணவுகளுக்கு மாற்றாக இந்த டிராகன் சிக்கனை செய்து நம் குடும்பத்தினரை அசத்தலாம். நம் குழந்தைகளும் இதை கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள். மேலும் டிராகன் சிக்கனை செய்வதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் இவை செய்யும் முறை மிகவும் எளிமையானது. அதனால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி மிக எளிதாக செய்து விடலாம்.

இப்பொழுது கீழே டிராகன் சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Dragon Chicken
5 from 1 vote

டிராகன் சிக்கன்

டிராகன்சிக்கன் ஒரு மாலை நேர உணவாக சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indo-Chinese

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் சிக்கன்
  • 1 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை குடை மிளகாய்
  • 1 சிவப்பு குடை மிளகாய்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 3 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  • மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
  • ½ மேஜைக்கரண்டி எள் விதைகள்
  • ½ மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி டார்க் சோயா சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி டொமேட்டோ சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
  • 10 to 15 முந்திரி பருப்பு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு நெய்
  • சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

செய்முறை

  • முதலில் வெங்காயம், குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், மற்றும் பூண்டை நறுக்கி, சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு வெள்ளை மிளகு தூள் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அப்படியே சிறிது நேரம் ஊற விடவும்.
  • பின்பு வேறொரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி அளவு வெள்ளை மிளகு தூள், ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து கொள்ளவும். (4 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.)
  • பிறகு அதை நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே அதை ஊற விடவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் முந்திரியை போட்டு அதை சிறிது சிவக்கும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கனை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதை பொரியவிடவும்.
  • பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு சிக்கன் முழுமையாக பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து பின்பு ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (சிக்கன் நன்கு பொன்னிறமாக ஆவதற்கு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் ஆகலாம்.)
  • இவ்வாறு மீதமுள்ள சிக்கன் துண்டுகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ரெட் சில்லி சாஸ், டார்க் சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சர்க்கரை, மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய்களை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும். (ஒரு நிமிடமும்முழுவதும் ஒரு கரண்டியின் மூலம் சிக்கனை கிளறிக்கொண்டே இருக்கவும்.)
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி அளவு தண்ணீரை தெளித்து அது வற்றும் வரை சிக்கனை கிளறி கொண்டே இருக்கவும்.
  • தண்ணீர் வற்றியதும் அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு டிராகன் சிக்கனை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான டிராகன் சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter