Home Tamil சோன்பப்படி

சோன்பப்படி

0 comments
Published under: Tamil
பல பேர்களின்பிடித்தமான இனிப்பு வகைகளில் சோன்பப்படி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்

சோன்பப்படி இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு வகை. பல பேர்களின் பிடித்தமான இனிப்பு வகைகளில் சோன்பப்படி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஆரம்ப காலகட்டங்களில் ஒரே ப்ளேவரில் செய்யப்பட்ட இவை தற்போது விதம் விதமான ப்ளேவர்களில் செய்யப்படுகிறது. அதில் சாக்லேட், ஸ்டாபெரி, மாம்பழம், மற்றும் அண்ணாச்சி பழ ப்ளேவர்கல் பலரின் விருப்பத்திற்குரியவை. இதில் குறிப்பாக சாக்லெட் ப்ளேவர் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானவை.

Soan Papdi

பொதுவாக சோன்பப்படியை விரும்பி உண்பவர்கள் இதை பேக்கரிகளில் வாங்கி சுவைப்பது தான் வழக்கம். இதனின் செய்யும் முறை கடினமாக இருப்பதுவே அதற்கு காரணம். ஆனால் பலருக்கும் தெரியாது இதை நம் வீட்டிலேயே வெகு எளிதாக குறைந்த நேரத்திலேயே செய்ய முடியும் என்று. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை அப்படியே பின்பற்றி இதை செய்தால் நாம் வீட்டிலேயே வெகு எளிதாக கடைகளில் கிடைக்கும் சோன்பப்படிகளை போன்றே அதே சுவையில் நாம் சோன்பப்படியை செய்து சுவைக்கலாம்.

இப்பொழுது கீழே சோன்பப்படி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Soan Papdi
3.15 from 7 votes

சோன்பப்படி

பல பேர்களின்பிடித்தமான இனிப்பு வகைகளில் சோன்பப்படி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்
Prep Time15 minutes
Cook Time45 minutes
Total Time1 hour
Course: Dessert
Cuisine: Indian, North Indian

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • ½ கப் மைதா மாவு
  • 1 கப் சர்க்கரை
  • ½ கப் நெய்
  • 1 மேஜைக்கரண்டி பிஸ்தா
  • 1 மேஜைக்கரண்டி பாதாம்
  • 1 மேஜைக்கரண்டி முந்திரி
  • ½ எலுமிச்சம் பழம்
  • 2 சிட்டிகை உப்பு
  • தேவையான அளவு வெண்ணெய்

செய்முறை

  • முதலில் பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மற்றும் எலுமிச்சம் பழத்திலிருந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் கடலை மாவை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் மைதா மாவை போட்டு அதையும் நன்கு கலந்து விடவும். (சிறிது வறண்டு தான் இருக்கும் ஆனாலும் நாம் தண்ணீர் எதுவும் ஊற்றி விடக்கூடாது.)
  • பின்னர் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கவும்.
  • 8 நிமிடத்திற்கு பிறகு மாவு நன்கு உருகி சிறு சிறு பபிள்ஸ் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நேரம் ஆற விடவும்.
  • அது ஆறுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி பின்பு சர்க்கரையை அதில் போட்டு ஒரு கரண்டி மூலம் அதை நன்கு கரைத்து விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • 5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நன்கு நுரை வந்ததும் அதில் 2 சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதனுடன் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறையும் அதில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் சிறிது பெரிய அளவு பபிள்ஸ் வந்ததும் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் கொதித்து கொண்டிருக்கும் இந்த சிரப்பில் இருந்து ஒரு கரண்டியின் மூலம் சிறிதளவு எடுத்து இந்த கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் ஊற்றவும்.
  • 3 வினாடிகளுக்கு பிறகு நாம் கிண்ணத்தில் ஊற்றிய அந்த சிரப்பை எடுத்து உருட்டினால் அது நாம் உருட்டும் வடிவிற்கு வரவேண்டும்.
  • அப்படி வந்துவிட்டால் ஒரு pan னை எடுத்து அதில் நெய்யை நன்கு தடவி வைத்து கொள்ளவும்.
  • பின்பு அடுப்பை அணைத்து விட்டு இந்த சிரப்பை எடுத்த அந்த pan னில் ஊற்றி விடவும்.
  • அடுத்து அதை ஒரு போர்க் ஸ்பூனின் மூலம் அதை நன்கு கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.
  • பிறகு அது சிறிது கெட்டியானதும் அதை 2 போர்க் ஸ்பூனின் மூலம் அது நன்கு கெட்டியாகும் வரை தூக்கி தூக்கி கிளறி விடவும்.
  • அது நன்கு கெட்டியானதும் நம் கைகளில் நன்கு நெய் தடவிக்கொண்டு அது நன்கு வெள்ளை நிறம் வரும் வரை அதை நன்றாக இழுத்து இழுத்து விட வேண்டும். (அது சூடாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.)
  • எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாக இழுத்து விடுகிறோமோ அந்த அளவுக்கு நம் சோன்பப்படி மிருதுவாகவும் மற்றும் நன்கு நூல் நூலாக இருக்கும்.
  • அது நன்கு வெள்ளை நிறம் வந்ததும் அதை நாம் செய்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையில் போட்டு அதை நன்கு இழுத்து இழுத்தே அதை நன்கு மாவுடன் கலந்து விடவும். (இப்பொழுதும் அது சூடாக தான் இருக்கும் அதனால் நாம் கவனமாக இதை செய்ய வேண்டும்.)
  • பின்பு அது ஆறுவதற்குள் ஒரு ட்ரையில் வெண்ணெய்யை தடவி இந்த கலவையை அதில் சூடாக இருக்கும் போதே வைத்து நன்கு பரப்பி விட்டு அதன் மேலே நாம் நறுக்கி வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை போடவும்.
  • சரியாக 2 நிமிடத்திற்கு பிறகு அதை ஒரு கத்தியின் மூலம் அவரவருக்கு பிடித்தமான வடிவில் கோடுகளை போட்டு அதை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு எடுத்து பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் மிருதுவான மற்றும் மிகவும் சுவையான சோன்பப்படி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
3.15 from 7 votes (7 ratings without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter