கோடை வெயிலுக்கு நம் நாக்கு வறண்டு போகாமல் இருப்பதற்கு மற்றும் உடல் சோர்வடையாமல் இருப்பதற்கு நாம் குளிர்பானங்களை பருகுவது இயல்பு தான். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான கேரட் ஆரஞ்சு ஜூஸ் எனும் குளிர்பானம். வழக்கமாக நாம் ஆரஞ்சை ஜூஸ் செய்து பருகி இருப்போம். அதனுடன் கேரட்டையும் சேர்த்து செய்வது தான் இந்த கேரட் ஆரஞ்சு ஜூஸ்.
பொதுவாக கேரட்டில் வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி இருப்பதால் அவை கண்ணுக்கு மிகவும் நல்லது அது போன்றே ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதினால் இவை உடம்பில் இருக்கும் திசுக்களை சரி செய்வது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் நாம் ஆரஞ்சு மற்றும் கேரட்டை வைத்து நாம் இந்த ஜூசை செய்வதனால் இவை உடம்புக்கு மிகவும் சத்தானது. மேலும் இவை மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் பொதுவாக ஆரஞ்சு மற்றும் கேரட்டை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இதை அடம்பிடிக்காமல் பருகுவார்கள்.
இப்பொழுது கீழே கேரட் ஆரஞ்சு ஜூஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கேரட் ஆரஞ்சு ஜூஸ்
தேவையான பொருட்கள்
- 2 கேரட்
- 2 ஆரஞ்சு
- 1/2 எலுமிச்சம் பழம்
- 4 மேஜைக்கரண்டி சர்க்கரை
- ½ இஞ்சி துண்டு
- தேவையான அளவு ஐஸ்க்யூப்ஸ்
செய்முறை
- முதலில் கேரட் மற்றும் ஆரஞ்சை வெட்டி வைத்து, பின் புஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை நன்கு கரையும் வரை அதை கிண்டி விடவும்.
- சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.
- அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட் மற்றும் இஞ்சி துண்டை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- இப்பொழுது அந்த சக்கையை ஒரு வெள்ளை துணியில் கொட்டி துணியை மடித்து நன்கு இருக்கமாக சுற்றி வரும் சாரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து அந்த கேரட் சக்கையை மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை மீண்டும் நன்கு அரைக்கவும்.
- பிறகு அந்த சக்கையை நாம் முன்பு செய்தது போலவே மீண்டும் ஒரு முறை செய்து வரும் சாறை நாம் ஏற்கனவே சாறை எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்து விடவும்.
- பின்பு ஒரு juicer யின் மூலம் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சாறை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் கேரட் சாறில் ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும்.
- இப்பொழுது அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணியை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். (ஜூஸ் திக்காக வேண்டும் என்றால் தண்ணீர் கம்மியாகவும், ஜூஸ் தண்ணியாக வேண்டும் என்றால் தண்ணீர் அதிகமாகவும் சேர்த்து கொள்ளவும்.)
- அடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும். (தேனை விரும்புவர்கள் இதில் சர்க்கரை சிரப்புக்கு பதிலாக தேனை சேர்த்து கொள்ளலாம்.)
- பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ்க்யூப்ஸை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் கேரட் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் 2 ஆரஞ்சு பழ slice ஐ நறுக்கி போட்டு அதை சில்லென்று பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான கேரட் ஆரஞ்சு ஜூஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.