கோடை வந்து விட்டால் போதும் பழங்கள் மற்றும் பழச்சாறுக்கு மவுசு தானாக கூடி விடும். உடம்பு சோர்வு மற்றும் சூட்டை தணிக்க பலரும் பழச்சாறு கடைகளை தேடி செல்வதை நம்மால் காண முடியும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெள்ளரிக்காய் புதினா லெமனேட். பொதுவாகவே வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டவை. இதை இரண்டையும் சேர்த்து நாம் இந்த ஜூஸை செய்வதனால் இவை உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தன்மையை கொடுக்கும்.
வெள்ளரிக்காய் புதினா லெமனேட்யின் ஸ்பெஷல் என்னவென்றால் மற்ற பழச்சாறுகளை போல இவைக்கு நாம் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மிகவும் குறைந்த செலவிலேயே நம் வீட்டிலேயே இந்த வெள்ளரிக்காய் புதினா லெமனேட்டை வெகு எளிதாக நாம் செய்து பருகலாம். இந்த கோடை வெயிலுக்கு நம் குழந்தைகளுக்கு இதை ஒரு வாட்டர் பாட்டிலில் ஊற்றி ஸ்கூலுக்கு கொடுத்தனுப்ப அல்லது நாம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லவும் இந்த வெள்ளரிக்காய் புதினா லெமனேட் மிகவும் உகந்தது.
இப்பொழுது கீழே வெள்ளரிக்காய் புதினா லெமனேட் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
வெள்ளரிக்காய் புதினா லெமனேட்
தேவையான பொருட்கள்
- 1 பெரிய வெள்ளரிக்காய்
- 15 to 20 புதினா இலைகள்
- 5 எலுமிச்சை பழம்
- தேவையான அளவு சர்க்கரை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு ஐஸ்க்யூப்ஸ்
செய்முறை
- முதலில் பெரிய வெள்ளரிக்காயின் தோலை சிவி அதை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி மற்றும் புதினா இலைகளை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை நன்கு கரையும் வரை அதை கிண்டி விடவும்.
- சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.
- பின்பு எலுமிச்சம் பழங்களை பாதி பாதியாக வெட்டி அதை ஒரு squeezer ல் வைத்து பிழிந்து சாறை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் 4 அல்லது 6 புதினா இலைகளை போட்டு வைக்கவும்.
- பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரி துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 8 லிருந்து 10 புதினா இலைகளையும் போட்டு நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை சிறிதளவு ஊற்றி அதை நன்கு அரைக்கவும்.
- பின்னர் அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அந்த சாறை எடுத்து நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து அதை நன்கு கலக்கி விடவும்.
- அடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அதில் ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும். (தேனை விரும்புவர்கள் இதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்து கொள்ளலாம்.)
- சர்க்கரை மற்றும் தேனை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக அவரவர் விருப்பத்திற்கேற்ப உப்பை சேர்த்து கொள்ளலாம்.
- பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ்க்யூப்ஸ் மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் வெள்ளரிக்காய் புதினா லெமனேட்டை ஊற்றி அதில் 2 எலுமிச்சம் பழ slice ஐ நறுக்கி போட்டு 2 அல்லது 3 புதினா இலையை போட்டு சில்லென்று பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சியான வெள்ளரிக்காய் புதினா லெமனேட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து இந்த கோடை வெயிலுக்கு பருகி மகிழுங்கள்.