Home Tamil ஃபலுடா

ஃபலுடா

0 comments
Published under: Tamil
கோடைகாலங்களில் மதிய நேரங்களில் ஃபலுடாவை சுவைக்கும் சுகமே தனி தான்.

ஃபலுடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு குளிர்பானம். குறிப்பாக உணவுப் பிரியர்கள் மத்தியில் ஃபலுடாவுக்கு என ஒரு தனி வரவேற்பு உண்டு. கோடை காலம் வந்து விட்டால் போதும் இதனின் மதிப்பு மேலும் கூடி விடும். கோடை காலங்களில் மதிய நேரங்களில் ஃபலுடாவை சுவைக்கும் சுகமே தனி தான். ஃபலுடாவின் சிறப்பு என்னவென்றால் மற்ற குளிர்பானங்களை போல இவை வெறும் பழங்களை மட்டும் கொண்டு செய்யப்படும் குளிர்பானம் அல்ல. பழங்களுடன் இதில் நாம் ஐஸ்கிரீமையும் சேர்ப்பது தான் ஃபலுடா பலருக்கும் பிடித்தமான குளிர்பானமாக இருப்பதற்கான காரணம்.

Falooda

ஃபலுடா ஈரானியர்களின் ஒரு பாரம்பரியமான குளிர்பானம். ஃபலுடாவை ஈரானில் faloodeh என்று அழைக்கிறார்கள். ஈரானில் உதயமான இவை முகலாயர்களின் இந்திய படையெடுப்பின் போது இந்தியாவில் பிரபலமடைந்து இருக்கிறது. மெல்ல மெல்ல இவை பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், மியான்மர், வங்கதேசம், மற்றும் ஸ்ரீலங்காவிலும் பிரபலமடைந்து விட்டது. ஆனால் ஈரானிய faloodeh ஐ வீட முற்றிலும் மாறுபட்டதாக அந்தந்த நாட்டில் இருக்கும் சமையல் முறைக்கேற்ப மக்கள் இதை செய்து சுவைக்கிறார்கள்.

பால் மற்றும் பல பழவகைகளை கொண்டு இந்த ஃபலுடாவை நாம் செய்வதால் இவை உடம்பிற்கு மிகவும் சத்தானது. அதனால் எந்த வித ஒரு ஐயப்பாடும் இன்றி குழந்தைகளுக்கு இதை எவ்வளவு வேண்டுமானாலும் நாம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் சேராது என்றால் ஐஸ் கிரீம்களை தவிர்த்து விட்டும் இதை நாம் கொடுக்கலாம். மேலும் இவ்வளவு சத்தான ஒரு குளிர்பானத்தை செய்வதற்கு அதிக நேரமும் எடுக்காது. வெறும் பழங்களை நறுக்கி பாலை காய்ச்சி விட்டால் போதும் ஃபலுடா ரெடி.

இப்பொழுது கீழே ஃபலுடா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Falooda
5 from 1 vote

ஃபலுடா

கோடைகாலங்களில் மதிய நேரங்களில் ஃபலுடாவை சுவைக்கும் சுகமே தனி தான்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Dessert
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 கப் பால்
  • 2 மேஜைக்கரண்டி sweet basil seeds
  • 1 சின்ன கப் சேமியா
  • 1 scoop ஐஸ்கிரீம்
  • 6 to 8 பீஸ் மாம்பழம்
  • 6 to 8 பீஸ் ஆப்பிள்
  • 6 to 8 பீஸ் கிருணிப்பழம்
  • 8 to 10 திராட்சை பழம்
  • 4 மேஜைக்கரண்டி மாதுளம் பழம்
  • 1/4 மேஜைக்கரண்டி குங்குமப்பூ
  • 6 to 8 பாதாம்
  • 6 to 8 பிஸ்தா
  • 2 wafer sticks
  • தேவையான அளவு ரோஸ் எஸன்ஸ்
  • தேவையான அளவு ஜெல்லி
  • தேவையான அளவு சர்க்கரை

செய்முறை

  • முதலில் sweet basil seeds ஐ ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் சிறிதளவு குடி தண்ணீர் ஊற்றி அதை சுமார் 25 லிருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து மாம்பழம், ஆப்பிள், கிரேப்ஸ், மாதுளை பழம், கிருணிப்பழம், பாதாம், மற்றும் பிஸ்தாவை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சேமியாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் சேமியாவை கொட்டி அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு அதை சரியாக 2 நிமிடம் வரை வேக விட்டு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பால் சிறிது சுட ஆரம்பிக்கும் போது அதில் குங்குமப்பூவை போட்டு நன்கு கலந்து விடவும்.
  • பால் நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்து விட்டு பாலை அடுப்பில் இருந்து இறக்கி அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து அதை கரைத்து விட்டு பாலை நன்கு ஆற விடவும். (பால் சூடாக இருக்கும் போது அதில் பழங்களை நாம் போட கூடாது.)
  • அடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் sweet basil seeds லிருந்து 2 மேஜைக்கரண்டி சேர்க்கவும். (sweet basil seeds ஐ தண்ணீரோடு மேஜைக்கரண்டியில் எடுத்து சேர்க்கவும்.)
  • பின்பு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை சிறிதளவு எடுத்து போடவும்.
  • பின்னர் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாம்பழம், ஆப்பிள், கிரேப்ஸ், மாதுளை பழம், மற்றும் கிர்ணி பழத்திலிருந்து 2 அல்லது 3 துண்டுகளை எடுத்து இதில் போடவும்.
  • பிறகு அதில் குழந்தைகளுக்கு பிடித்த ஜெல்லி flavor களிலிருந்து சிறிது ஜெல்லிகளை சேர்த்து கொள்ளவும்.
  • பின்பு மீண்டும் அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நாம் ஊற வைத்திருக்கும் sweet basil seeds ஐ சேர்க்கவும். (sweet basil seeds ஐ அதிகம் விரும்பாதவர்கள் அதை முதலில் போட்ட 2 மேஜைக்கரண்டியோடு நிறுத்தி கொள்ளலாம்.)
  • இப்பொழுது மீண்டும் ஒரு முறை நாம் தயார் செய்து வைத்திருக்கும் பழங்களிலிருந்து 2 அல்லது 3 துண்டுகளை எடுத்து இதில் சேர்க்கவும்.
  • அடுத்து நாம் ஆற வைத்திருக்கும் பாலை எடுத்து அது ஆறியதை உறுதி செய்த பின் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரோஸ் எஸ்என்ஸை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் நாம் பழங்களை போட்டு தயார் செய்து வைத்திருக்கும் கண்ணாடி டம்ளரில் இந்த பாலை பக்குவமாக ஊற்றவும்.
  • பின்பு அதன் மேலே மீண்டும் ஒருமுறை சிறிது பழங்கள், ஜெல்லிகள், மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தாவை அதன் மேலே தூவி விடவும்.
  • பிறகு அதன் மேலே ஒரு scoop வெண்ணிலா ஐஸ்க்ரீமை எடுத்து போட்டு அதனுடன் ஒரு wafer stick கையும் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
  • அவர் அவர்களுக்கு பிடித்தமான ஐஸ்க்ரீம் flavor களையும் நாம் சேர்த்து கொள்ளலாம்.
  • இப்பொழுது உங்கள் அருமையான, மிகவும் சுவையான, மற்றும் சில்லென்று இருக்கும் ஃபலுடா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter