Home Tamil சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

0 comments
Published under: Tamil
பொதுவாக நம் குழந்தைகள் நம்மிடம் விரும்பி கேட்கும்உணவுகளில் சிக்கன் ஃப்ரைட்ரைஸும்கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

ஃப்ரைட் ரைஸ்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு துரித உணவு வகை. ஃப்ரைட் ரைஸ்களில் பல வகை உண்டு. சிக்கன் ஃப்ரைட் ரைஸ், எக் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ஃப்ரைட் ரைஸ், மற்றும் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் அதில் குறிப்பிடத்தக்கது. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சிக்கன் ஃப்ரைட் ரைஸ்.

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் என்றாலே இளம் தலை முறையினர் மத்தியில் அதற்கு இருக்கும் மவுசே தனிதான். நண்பர்களுக்கு மத்தியில் பிறந்தநாள் கொண்டாட்டமோ அல்லது பார்ட்டியோ சிக்கன் ப்ரைட் ரைஸ் தான் அவர்களின் டாப் சாய்ஸாக இருக்கிறது. பொதுவாக சிக்கன் ஃப்ரைட் ரைஸ்சோடு கிரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன், சில்லி சிக்கன், அல்லது சிக்கன் பட்டர் மசாலா சேர்த்து உண்பதை பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது.

Chicken Fried Rice

பொதுவாக நம் குழந்தைகள் நம்மிடம் விரும்பி கேட்கும் உணவுகளில் சிக்கன் ஃப்ரைட் ரைஸும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.அவ்வாறு இருக்கையில் ரெஸ்டாரன்ட் மற்றும் fast food களில் அவர்களுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்த்து விட்டு சிக்கன் ஃப்ரைட் ரைஸை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் நாம் செய்து கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Fried Rice
5 from 1 vote

சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

பொதுவாக நம் குழந்தைகள் நம்மிடம் விரும்பி கேட்கும்உணவுகளில் சிக்கன் ஃப்ரைட்ரைஸும்கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Main Course
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ பாசுமதி அரிசி
  • 1/2 கிலோ சிக்கன்
  • 3 முட்டை
  • 2 கேரட்
  • 6 to 8 பீன்ஸ்
  • 1/2 முட்டைகோஸ் சிறியது
  • 1 1/2 பெரிய வெங்காயம்
  • 1 1/2 குடை மிளகாய்
  • 6 பூண்டு பல்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 எலுமிச்சம் பழம்
  • ஒரு கை அளவு ஸ்பிரிங் ஆனியன்
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்
  • 1 1/2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 1 1/2 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • பின்பு வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஸ்பிரிங் ஆனியனை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு bowl ல் நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு கொள்ளவும்.
  • பின்பு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மிளகு தூள், மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டிலிருந்து அரை மேஜைக்கரண்டி சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் pan ன் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை பக்குவமாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு அதை நன்கு வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் ஒவ்வொன்றாக முட்டைகளை உடைத்து ஊற்றி அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை ஒரு கரண்டியின் மூலம் வதக்கி முட்டை சிறிது வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை ஊற்றவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).
  • அடுத்து அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு பாசுமதி அரிசியை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். (பாசுமதி அரிசியை முக்கால் பாகம் மட்டுமே வேக வைக்கவும்.)
  • சாதம் முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால்தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும். (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.)
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை அதில் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.
  • அடுத்து அதில் தேவையான அளவிற்கு உப்பு, சோயா சாஸ், மற்றும் சில்லி சாஸ் சேர்த்து அதை நன்கு கிளறவும்.
  • காய்கறிகள் வெந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
  • இப்பொழுது ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து இதில் சேர்த்து சாதம் உடையாமல் பக்குவமாக நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பிறகு அதில் வெள்ளை மிளகுத் தூள் மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் வரை கிளறவும்.
  • பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter