மட்டன் சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இதற்கு அசைவ பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராமப்புற பகுதிகளில் இவை கிடைக்காத ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி உணவு கடைகளை நாம் காண்பதே மிகவும் அரிது. இவை சாதத்தில் போட்டு உண்பதற்கு, மற்றும் சப்பாத்தி, நான்க்கு சைடிஃஷ் ஆக உண்பதற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.
இதனின் சிறப்பு என்னவென்றால் இதை செய்வதற்கு வெகு நேரம் ஆகாது மேலும் கடினமான செய்முறையும் கிடையாது. இதை மிக எளிதாக சமைக்க தெரியாதவர்கள் கூட செய்து விடலாம். இதை செய்வதற்கு தேவையான மசாலாவை நாம் தயார் செய்து விட்டால் போதும் இதை வெகு எளிதாக செய்து விடலாம்.
இப்பொழுது கீழே செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா
தேவையான பொருட்கள்
- 1/2 kg மட்டன்
- 10 to 15 சின்ன வெங்காயம்
- 3 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மல்லி
- 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 காஞ்ச மிளகாய்
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்து, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் நாம் கழுவி வைத்திருக்கும் மட்டனை சேர்த்து அது நன்கு இஞ்சி பூண்டு பேஸ்டுடன் ஒட்டுமாறு சுமார் ஒரு நிமிடம் வரை கிளறி விட்ட பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு குக்கரில் மூடி போட்டு மட்டனை சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் மட்டன் நன்றாக தண்ணீர் விட்டு இருக்கும் அதனுடன் நாம் மேலும் கால் கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.
- நாம் மீண்டும் மட்டனை வேக வைக்க போவதால் மட்டன் 90 விழுக்காடு வெந்தால் போதும்.
- மட்டன் வேகுவதற்குள் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், மல்லி, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அது நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
- பின்பு அதை சிறிது நேரம் ஆற விட்ட பின் அப்படியே ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
- 15 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அனைத்து விட்டு குக்கரின் மூடியை திறந்து பார்த்தால் மட்டன் 90 விழுக்காடு வெந்து தண்ணீரும் சரியாக இருக்கும். (ஒரு வேளை தண்ணீர் அதிகமாக இருந்தால் அதை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.)
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிலை, ஒரு காஞ்ச மிளகாய், மற்றும் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.
- தண்ணீர் அதிகமாக இருந்து அதை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இப்பொழுது இதில் சேர்த்து கொள்ளவும்.
- பின்பு அதில் கரம் மசாலா மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை தூவி நன்கு கிளறி விட்டு மூடி போட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.