Home Tamil பேல் பூரி

பேல் பூரி

0 comments
Published under: Tamil
வட இந்திய chat களில் முக்கியமான ஒன்று பேல் பூரி. பேல் பூரியில் பல வகை உண்டு பேல் சேவ் பூரி, டாள் பேல் பூரி, மற்றும் சேவ் பப்படி chat அதில் குறிப்பிடத்தக்கது.

Chat என்றாலே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு முதன்மை இடங்களை பிடிப்பது வட இந்திய உணவு வகைகள் தான். இதற்கென ஒரு தனி உணவு பிரியர்கள் பட்டாளமே உண்டு. இதனால் வட இந்திய chat களுக்கு என்று மட்டும் தனி chat கடைகள் உண்டு. மேலும் பிரபல உணவகங்களில் பிரத்தியேகமாக வட இந்திய chat களை செய்வதற்கு என்று தனி மாஸ்டர்களை நாம் காணலாம். இந்த வட இந்திய chat களில் முக்கியமான ஒன்று பேல் பூரி. பேல் பூரியில் பல வகை உண்டு பேல் சேவ் பூரி, டாள் பேல் பூரி, மற்றும் சேவ் பப்படி chat அதில் குறிப்பிடத்தக்கது.

பேல் பூரி வட இந்தியாவில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் உள்ள பிரபலமான Vithal என்கின்ற உணவகத்தில் உதய மானது என்று ஒரு சாராரும். அதை மறுத்து இவை உத்தரப்பிரதேசத்தில் உதயம் ஆனவை என்று இன்னொரு சாராரும் கூறி வருகிறார்கள். என்ன தான் இவை வட இந்தியாவில் தோன்றியிருந்தாலும் இவை இந்தியா முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு அட்டகாசமான மாலை நேர உணவு வகை.

Bhel Puri

பேல் பூரி வெவ்வேறு இடங்களில் அங்கிருக்கும் உணவு முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு செய்யப்படுகிறது. அதற்கேற்றவாரே வித்தியாசமான பெயர்களிலும் இவை அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு பெங்காலி சமையல் முறையில் செய்யப்படும் பேல் பூரியை jhalmuri என்றும், மைசூர் சமையல் முறையை பின்பற்றி செய்யப்படும் பேல் பூரியை churmuri என்றும் அழைக்கிறார்கள்.

இப்பொழுது கீழே பேல் பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Bhel Puri
5 from 2 votes

பேல் பூரி

வட இந்திய chat களில் முக்கியமான ஒன்று பேல் பூரி. பேல் பூரியில் பல வகை உண்டு பேல் சேவ் பூரி, டாள் பேல் பூரி, மற்றும் சேவ் பப்படி chat அதில் குறிப்பிடத்தக்கது.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Main Course, Snack
Cuisine: Indian, North Indian
Keyword: bhel puri

Ingredients

  • 5 to 6 பானி பூரி
  • 3 கப் பொரி
  • 1/4 கப் மிக்சர்
  • 1/4 கப் ஒமபொடி
  • 1/4 கப் வெல்லம்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 1/4 கப் கொண்டை கடலை
  • 4 பச்சை மிளகாய்
  • 1 லெமன்
  • 8 to 10 புளி துண்டு
  • 4 to 5 பேரிச்சம்பழம்
  • 1 இஞ்சி துண்டு
  • 1 மேஜைக்கரண்டி வறுத்த கடலை
  • 1 மேஜைக்கரண்டி சாட் மசாலா
  • மிளகாய் தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கை புதினா
  • 1 கை கொத்தமல்லி

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், மற்றும் பேரிச்சம்பழத்தை நறுக்கி, கொண்டை கடலை மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து உருளைக்கிழங்கை மசித்து வைத்து கொள்ளவும்,
  • அடுத்து வெல்லத்தைப் பொடித்து, லெமன் ஐ பிழிந்து, மற்றும் புளியை சுமார் 10 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து அதனின் சாரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது பச்சை சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, ஒரு துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு அதனுடன் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை பாதி அளவு சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
  • பின்பு புளி சட்னி செய்வதற்கு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் புளியைக் கரைத்து எடுத்து வைத்திருக்கும் புளி தண்ணியை ஊற்றி சுட வைக்கவும்.
  • புளி தண்ணீர் சுட்டதும் அதில் பொடித்து வைத்திருக்கும் வெல்லம், நறுக்கி வைத்திருக்கும் பேர்ச்சம்பழம், அரை மேஜைக்கரண்டி அளவு மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.
  • தண்ணீர் வற்றி சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு இந்த புளி தண்ணியை ஆற விடவும்.
  • இது ஆறியவுடன் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl ல் பொரி, மிக்சர், ஒமபொடி, வறுத்த கடலை, மற்றும் பானி பூரியை நொறுக்கிப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், 2 பச்சை மிளகாய், வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டை கடலை, மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, சாட் மசாலா, அரை மேஜைக்கரண்டி அளவு மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் நாம் செய்து வைத்திருக்கும் பச்சை சட்னி மற்றும் புளி சட்னியை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து, மீதமுள்ள எலுமிச்சை சாறையும் சேர்த்து, சிறிதளவு கொத்தமல்லியை தூவி நன்கு கிளறி ஒரு கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் வீட்டிலே செய்த பேல் பூரி சாட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Sign up for our newsletter

Newsletter

You can find the recipe for Bhel Puri in English here

5 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter