போளி இந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக இவை கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் மிகவும் ஃபேமஸ். இது எந்த அளவுக்கு அங்கு ஃபேமஸ் என்றால் இவை இல்லாத திருமண விருந்துகளே அங்கு காண முடியாது எனும் அளவுக்கு. ஆங்கிலத்தில் sweet stuffed lentil flatbread என்று அழைக்கப்படும் இவை மகாராஷ்டிரத்தில் Puran போளி என்றும், கேரளாவில் Uppittu என்றும், ஆந்திராவில் Oliga என்றும், கர்நாடகாவில் Obbattu என்றும், மற்றும் குஜராத்தில் Vedmi என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக இதை மைதா மாவை கொண்டே செய்கிறார்கள். ஆனால் நாம் இங்கு காண இருப்பது கோதுமையை கொண்டு செய்யப்படும் கோதுமை பருப்பு போளி. இவை இரண்டுக்கும் சிறிது அளவு சுவையில் மாறுபாடு இருந்தாலும் ஏறத்தாழ ரெண்டுமே ஒரே சுவைதான். ஆனால் மைதாவை விட கோதுமை உடம்புக்கு நல்லது என்பதினால் கோதுமை பருப்பு போளியை கவலையின்றி செய்து சுவைக்கலாம்.
இப்பொழுது கீழே கோதுமை பருப்பு போளி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கோதுமை பருப்பு போளி
Ingredients
- 1 கப் கடலை பருப்பு
- 1 கப் பொடித்த வெல்லம்
- 1 1/2 கப் கோதுமை மாவு
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- 1 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- 1 சிட்டிகை உப்பு
Instructions
- முதலில் வெல்லத்தைப் பொடித்து, ஏலக்காயை தூள் செய்து, தேங்காயைத் துருவி, மற்றும் கடலை பருப்பை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது பொடித்த வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை கரைய விடவும்.
- அடுத்து கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு இந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இதை சப்பாத்தி மாவு பதத்தை விட மிருதுவாக இருக்குமாறு பிணைந்து கொள்ளவும்.
- பின்னர் அதில் 3 மேஜைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி மாவின் வெளிப்புறம் முழுவதும் தடவி அதை அப்படியே சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பை போட்டு அது முழுகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி போட்டு 5 விசில் வரும் வரை வேக விடவும்.
- 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பருப்பில் இருக்கும் தண்ணியை ஒரு சல்லடையின் மூலம் வடிகட்டி கொள்ளவும்.
- பின்பு வடிகட்டிய கடலை பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விடவும்.
- அடுத்து தண்ணீர் ஊற்றி வைத்திருக்கும் வெல்லத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து வெல்லம் நன்கு கரைந்ததும் அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, வடிகட்டி வைத்திருக்கும் வெல்ல பாகு, கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு துருவிய தேங்காய்யை ஒன்றாக சேர்த்து அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.
- பூரணம் சிறிது இலகுவாக இருக்கும் போதே அடுப்பை அணைத்து விட்டு pan ஐ அடுப்பிலேயே வைத்திருக்கவும். ஏனெனில் ஆறியவுடன் பூரணம் சிறிது கெட்டியாகும்.
- இப்பொழுது ஒரு பட்டர் பேப்பரில் எண்ணெய்யை தடவி அதில் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து உருண்டையாக உருட்டி வைத்து கைகளாலேயே மெதுவாக பக்குவமாக சப்பாத்தி வடிவத்தில் மாவை தட்டி கொள்ளவும்.
- பின்னர் பூரணத்தை உருண்டையாக உருட்டி தட்டிய மாவின் நடுவில் வைத்து மாவை மடித்து மீண்டும் உருட்டிக் கொள்ளவும்.
- அடுத்து இந்த மாவை எண்ணெய்யில் ஒரு முறை முக்கி எடுத்து பட்டர் பேப்பரில் வைத்து மீண்டும் கைகளின் மூலம் சப்பாத்தி வடிவத்தில் பக்குவமாக தட்டவும்.
- பின்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அது சுட்டதும் தட்டி வைத்திருக்கும் போளியை அதில் போட்டு அதன் மேலே கால் மேஜைக்கரண்டி அளவு நெய்யை தடவி விடவும்.
- பின்னர் ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு மீண்டும் கால் மேஜைக்கரண்டி நெய்யை தடவி சுட்டு எடுக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் இனிப்பான கோதுமை பருப்பு போளி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.