அசைவப் பிரியர்கள் மத்தியில் மீன் குழம்புக்கு இருக்கும் மவுசு தனி தான். ஏனென்றால் குழம்பில் ஊரிய மீனின் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதுவும் மறு நாள் வைத்து தோசைக்கோ, இட்லிக்கோ அல்லது சாதத்தில்லோ ஊற்றி சாப்பிட்டால் அதனின் ருசியே தனி தான். இந்த ருசிக்கான காரணம் குழம்பில் இருக்கும் அறுசுவை மசாலாக்களில் மீன் நன்கு ஊருவதே. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊர ஆரம்பித்து விட்டதா? கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் அட்டகாசமான மீன் குழம்பை நீங்களே வெகு சுலபமாக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.
இந்த மீன் குழம்பை வெவ்வேறு பகுதிகளில் அவரவர் உணவு முறைக்கு ஏற்ப வெவ்வேறு மசாலாக்கள் மற்றும் அங்கு கிடைக்கும் மீன் வகைகளை கொண்டு செய்கிறார்கள். அவ்வகையில் இன்று நாம் இங்கு காண இருப்பது கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு. சங்கரா மீனில் குறைந்த அளவு கலோரி, உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, பொட்டாசியம், மற்றும் omega ‑ 3 fatty acids இருப்பதினால் இவை உடம்புக்கும் மிகவும் நல்லது.
இப்பொழுது கீழே கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு
Ingredients
- 500 g சங்கரா மீன்
- 5 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி வெந்தயம்
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 3 பூண்டு பல்
- சிறிதளவு புளி
- 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
- 2 1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- கருவேப்பிலை சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
Instructions
- முதலில் மீனை நன்கு கழுவி வைத்து, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தயார் செய்து, தேங்காய்யை துருவி, மற்றும் புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கடுகு, சீரகம், வெந்தயம், மற்றும் மிளகை போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வறுக்கவும்.
- அடுத்து அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் 3 பல் பூண்டை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் அதில் கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு அரைத்து வைத்திருக்கும் மசாலா, மற்றும் ரெண்டரை மேஜைக்கரண்டி அளவு மல்லி தூள் சேர்த்து சரியாக ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது மீண்டும் pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பச்சை மிளகாயை போட்டு வதக்கி பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு கப் அளவு தண்ணீரை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- அடுத்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணியை அதனுடன் சேர்த்து நன்கு கிண்டி விட்டு மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.
- 7 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து சிறிதளவு கருவேப்பிலை தூவி பக்குவமாக ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.