Home Tamil தக்காளி புலாவ்

தக்காளி புலாவ்

0 comments
Published under: Tamil
குறைந்த நேரத்தில் மிக எளிதாக சமைக்கக் கூடிய ஒரு அட்டகாசமான உணவு வகை.

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. இதை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு செய்முறையை பின்பற்றி சைவ உணவாகவோ அல்லது அசைவ உணவாகவோ செய்து சுவைத்து மகிழ்கிறார்கள். இன்று இங்கு நாம் காண இருப்பது சைவ உணவை சார்ந்த தக்காளி புலாவ். அதனின் பெயருக்கு ஏற்றவாரே இதில் தக்காளி சுவையே பிரதானமாக இருக்கும். குறைந்த நேரத்தில் மிக எளிதாக சமைக்கக் கூடிய ஒரு அட்டகாசமான உணவு வகை இவை. அதனால் திடீரென ஒரு வித்தியாசமான உணவு சமைத்து உண்ண வேண்டும் என்று தோன்றினால் இதை செய்து சுவைக்கலாம்.

Tomato Pulao

இப்பொழுது கீழே தக்காளி புலாவ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Tomato Pulao
5 from 1 vote

தக்காளி புலாவ்

குறைந்த நேரத்தில் மிக எளிதாக சமைக்கக் கூடிய ஒரு அட்டகாசமான உணவு வகை.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Main Course
Cuisine: South Indian
Keyword: kids lunch, quick dinner ideas, tomato pulao, work lunch

Ingredients

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 4 தக்காளி
  • 1 கை அளவு பச்சை பட்டாணி
  • 3 பெரிய வெங்காயம்
  • 8 to 10 முந்திரி
  • 1 இஞ்சி துண்டு
  • 2 பூண்டு பல்
  • 1 பச்சை மிளகாய்
  • 4 சிவப்பு மிளகாய்
  • 1 நட்சத்திர பூ
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை துண்டு
  • 3 கிராம்பு
  • 1 ஜாதி பத்திரி
  • 1 பிரியாணி இலை
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள்
  • 1 கை அளவு கொத்தமல்லி
  • 1 கை அளவு புதினா
  • நெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி சுமார் 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாயை நறுக்கி, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, புதினா, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி, 2 பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய், 4 சிவப்பு மிளகாய், பாதி பெரிய வெங்காயம் நறுக்கியது, சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு ஒரு மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அதை அரைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.
  • நெய் சுட்டதும் அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதி பத்திரி, நட்சத்திர பூ, மற்றும் பிரியாணி இலையைப் போட்டு வதக்கவும்.
  • பின்னர் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி நன்கு கிளறி அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • மசாலாவின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
  • அடுத்து அதில் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
  • தக்காளி வதங்கியவுடன் அதில் ஒரு கையளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
  • பின்பு ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி இந்த மசாலாவுடன் சேர்த்து அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக கிளறி விடவும்.
  • அரிசி மசாலாவுடன் சேர்ந்த பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக விடவும்.
  • ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
  • சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து தக்காளி புலாவ்வை ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான தக்காளி புலாவ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Sign up for our newsletter

Newsletter

You can find the recipe forTomato Pulao in English here.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter