புலாவ்களில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது சோயா சங்க் புலாவ். இவை ஒரு கலக்கலான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. அது மட்டுமின்றி சோயா சங்குகளில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் சுலபமானது தான். விசேஷ நாட்கள், பிறந்த நாட்கள், அல்லது விருந்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு வரும் பட்சத்தில் வழக்கமாக செய்து பரிமாறப்படும் பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ்களுக்கு பதிலாக இந்த சோயா சங்க் புலாவ்வை பரிமாறி அசத்தலாம்.
இப்பொழுது கீழே சோயா சங்க் புலாவ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
சோயா சங்க் புலாவ்
Ingredients
- 1 கப் சோயா சங்க்
- 1 கப் பாசுமதி அரிசி
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1/4 கப் தயிர்
- 4 to 5 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 துண்டு பட்டை
- 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 பிரியாணி இலை
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- உப்பு தேவையான அளவு
- மிளகாய் தூள் தேவையான அளவு
- மஞ்சள் தூள் தேவையான அளவு
- 1 துண்டு இஞ்சி
- 2 பல் பூண்டு
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- புதினா தேவையான அளவு
- கொத்தமல்லி தேவையான அளவு
Instructions
- முதலில் ஒரு bowl ல் சோயா சங்குகளை போட்டு தண்ணீரை சுட வைத்து அதில் ஊற்றி சுமார் 5 நிமிடம் வரை ஊற விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் சோயா சங்குகளை எடுத்து அதை நன்றாகப் பிழிந்து அதில் இருக்கும் தண்ணியை முற்றிலுமாக எடுத்த பின் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதில் கால் கப் அளவு தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற வைக்கவும்.
- சோயா சங்க் ஊறுவதற்குள் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி சுமார் 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சீரகம், மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் சிறுது பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் சிறிது பொன்னிறம் ஆனதும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து நன்கு கிளறி அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சிறிது வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- அடுத்து அதில் ஊற வைத்திருக்கும் சோயா சங்குகளை சேர்த்து நன்கு கிளறி சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை வேக விடவும்.
- 6 நிமிடங்களுக்கு பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்னர் இதில் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து பக்குவமாக அரிசி உடையாமல் மெதுவாக கிளறி சுமார் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேக விடவும்.
- 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை திறக்காமல் வைத்திருக்கவும்.
- 15 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து புலாவ்வை எடுத்து ஒரு தட்டில் வைத்து ரைத்தா உடன் பரிமாறவும்.