பொதுவாக மஞ்சூரியன் என்றாலே பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு உணவு. அதில் குறிப்பாக சிக்கன் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன் மற்றும் வெஜிடபிள் மஞ்சூரியன் பிரபலமானவை. இவை ஃபிரைட் ரைஸ், நான், மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது.
இதில் கேரட், முட்டை கோஸ், மற்றும் பீன்ஸ் சேர்த்து செய்வதனால் இவை உடம்புக்கும் நல்லது. காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம்.
இப்பொழுது கீழே வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி
Ingredients
- 1 கப் துருவிய கேரட்
- 1 கப் துருவிய முட்டை கோஸ்
- 10 to 12 பீன்ஸ்
- 1 பெரிய வெங்காயம்
- 1 குடை மிளகாய்
- 2 மேஜைக்கரண்டி மைதா மாவு
- 2 மேஜைக்கரண்டி சோள மாவு
- மிளகாய் தூள் தேவையான அளவு
- மிளகு தூள் தேவையான அளவு
- 2 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
- 1 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
- 1 மேஜைக்கரண்டி சோயாசாஸ்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- வெங்காயத்தாள் சிறிதளவு
Instructions
- முதலில் கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், வெங்காயம், குடை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு bowl ல் துருவிய கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், தேவையான அளவு மிளகாய் தூள், சிறிதளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மைதா மாவு மற்றும் சோள மாவை ஒன்றாக போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
- அடுத்து இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (உருண்டை உடைந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடிக்கவும்.)
- இப்பொழுது ஒரு வட சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை வட சட்டியின் அளவிற்கேற்ப போட்டு ஒரு பக்கம் பொன்னிறம் ஆனதும் மறுபக்கம் திருப்பி விட்டு பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போன பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை போட்டு சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ், மற்றும் சோயா சாஸ் ஐ சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். (கிரேவியாக வேண்டுமென்றால் ஒரு மேஜைக்கரண்டி சோள மாவில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.)
- இப்பொழுது பொரித்து எடுத்து வைத்திருக்கும் உருண்டைகளை இதில் சேர்த்து பக்குவமாக உருண்டை உடைந்து விடாமல் கிளறி விடவும்.
- சுமார் 2 நிமிடம் வரை இதை வேக விட்டு இறக்குவதற்கு முன் சிறிதளவு வெங்காயத் தாள்களை அதில் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.