புலாவ்கள் உலகம் முழுவதும் பிரபலமான ஒரு உணவு வகை. வெவ்வேறு நாடுகளில் இவை வெவ்வேறு செய்முறைகளோடு செய்யப்படுகிறது. அதற்கேற்றவாரே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களால் இவை அழைக்கப்படுகிறது. சில நாடுகளில் இவை சைவ உணவாகும் பிற நாடுகளில் அசைவ உணவாகவும் செய்யப்படுகிறது. பொதுவாக சைவ உணவாக புலாவ்வை செய்யும் போது பல காய்கறிகளை சேர்த்து செய்வார்கள். ஆனால் வித்தியாசமாக சோள விதைகளை சேர்த்து கார்ன் புலாவ் ஆகவும் இதை செய்யலாம்.
இப்பொழுது கீழே கார்ன் புலாவ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கார்ன் புலாவ்
Ingredients
- 200 கிராம் சோள விதைகள்
- 1 கப் பாசுமதி அரிசி
- 2 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 3 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 கப் ஒரு கப் தேங்காய் பால்
- 4 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 1 துண்டு பட்டை
- 1 நட்சத்திர பூ
- 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
Instructions
- முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி 15 லிருந்து 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் பால், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றவும்.
- பின்பு அதில் சோள விதைகளை போட்டு அரை மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேக விட்ட பின் வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (குக்கரில் மீதம் தண்ணீர் இருந்தால் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.)
- அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நட்சத்திர பூ, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் சீரகத்தை போட்டு வதக்கவும்.
- இவை சிறிது வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சோள விதைகளை சேர்த்து ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி இதில் சேர்த்து அரிசி உடையாமல் பக்குவமாக கிளறி விடவும்.
- நன்கு கிளறிய பின் அதில் அரைத்து வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் மற்றும் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விடவும். (சோளம் வேக வைத்த தண்ணியை சேர்த்துக் கொள்ளவும்.)
- தண்ணீர் சிறிது சுட்டதும் குக்கரில் மூடி போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து சாதம் உடையாமல் வேறு ஒரு bowl ல் மாற்றிக் கொள்ளவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கார்ன் புலாவ் தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.