பாலக் பன்னீர் வட இந்தியாவை சேர்ந்த ஒரு பிரபலமான உணவு வகை. வட இந்தியாவில் உதயமாகி இருந்தாலும் இவை இந்தியா முழுவதும் ஃபேமஸ் தான். இது மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் கனடாவிலும் இவை பிரபலமாக இருக்கின்றது. பாலக் பன்னீர் இன் ஸ்பெஷல் என்னவென்றால் கீரைகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட பாலக் பன்னீர் ஐ விரும்பி உண்பார்கள். கீரையுடன் பன்னீரையும் சேர்ப்பதனால் இது உடம்பிற்கும் மிகவும் நல்லது.
இப்பொழுது கீழே பாலக் பன்னீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
பாலக் பன்னீர்
Ingredients
- 200 கிராம் பன்னீர்
- 250 கிராம் பாலக்கீரை
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 2 பல் பூண்டு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 2 மேஜைக்கரண்டி வெண்ணெய்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- மிளகாய்தூள் தேவையான அளவு
- 8 to 10 முந்திரி
- 1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
Instructions
- முதலில் தக்காளி, வெங்காயம், பூண்டு, மற்றும் பன்னீரை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை அரைத்து பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.
- தண்ணீர் சுட்ட பின் அதில் கீரையை எடுத்து நன்றாக கழுவி போட்டு 3 லிருந்து 5 நிமிடம் வரை நன்கு வேக வைக்கவும். (கீரை நிறம் மாறும் வரை சுடு தண்ணீரில் வேக வைக்கவும். நிறம் மாறிய உடனே எடுத்து விடவும்.)
- சுடு தண்ணியில் வேக வைத்த கீரையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு சுமார் 2 நிமிடம் பன்னீர் மிருதுவாக ஆகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகியதும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சீரகத்தை அதில் போடவும்.
- சீரகம் பொரிந்து வரும் பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அதன் பச்சை வாசம் போன பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
- தக்காளியை சிறிது வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
- இந்த கலவை சிறிது வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- இரண்டு நிமிடத்திற்கு பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் கீரையை ஊற்றி நன்கு கிளறி வேக விடவும். (கிரேவி மிகவும் திக்காக இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.)
- இப்பொழுது இந்த கிரேவியில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விடவும். பிறகு வதக்கி எடுத்து வைத்திருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக மெதுவாக இந்த கிரேவியில் சேர்த்து நன்கு கிளரி விட்டு சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அனைத்து விட்டு ஒரு மூடி போட்டு அதை அப்படியே சுமார் 10 நிமிடம் வரை வைக்கவும். 10 நிமிடத்திற்கு பிறகு இதை எடுத்து பரிமாறலாம்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பாலக் பன்னீர் தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Sign up for our newsletter
Palak Paneer Recipe in English