சாண்ட்விச் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச் என்றால் கேட்கவே தேவையில்லை. இவை பெரும்பாலும் மாலை நேர சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது ஆனால் இவை மதிய மற்றும் இரவு நேர உணவாக உண்ணவும் உகந்தது. உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் இந்த சாண்ட்விச்கள் அமெரிக்காவில் உதயம் ஆனதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் சாண்ட்விச் ஷாப்புகள் அல்லது ரெஸ்டாரண்ட்களில்லேயே இதை ஆர்டர் செய்து உண்கிறார்கள். ஆனால் இதை எளிதாக வீட்டிலேயே செய்து உண்ணலாம்.
இப்பொழுது கீழே சிக்கன் சாண்ட்விச் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
சிக்கன் சாண்ட்விச்
Ingredients
- 200 கிராம் போன்லெஸ் சிக்கன்
- 4 to 6 பிரெட் துண்டுகள்
- 1/2 கப் பெரிய வெங்காயம்
- 1/2 கப் பச்சை குடைமிளகாய்
- 1/2 கப் சிவப்பு குடைமிளகாய்
- 4 பல் பூண்டு
- வெண்ணெய் தேவையான அளவு
- மிளகு தூள் தேவையான அளவு
- 1/4 கப் mayonnaise
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி ஒரு கை அளவு
Instructions
- முதலில் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு சிக்கனை எடுத்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.
- தண்ணீர் சிறிது சுட்டதும் அதில் கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு, தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து ஒரு மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 4 விசிலுக்கு பின் சிக்கனை குக்கரில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும். (சிக்கன் வெந்த தண்ணியை அப்படியே வைத்துக் கொள்ளவும்.)
- சிக்கன் சிறிது ஆறியவுடன் அதை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சிறிதாக நறுக்கிய பூண்டை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் வேக வைத்து சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் சிக்கன், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகு தூள் போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து சிக்கன் வெந்த தண்ணியை சிறிதளவு இதில் ஊற்றி நன்கு கிளறி சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு சிக்கனில் ஊற்றிய தண்ணீர் நன்கு வற்றி இருக்கும். இப்பொழுது இதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆறவிடவும்.
- அடுத்த ஒரு கிண்ணத்தில் mayonnaise ஐ போட்டு அதில் ஆற வைத்திருக்கும் சிக்கனை மற்றும் ஒரு கை அளவு கொத்தமல்லியை போட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பிரட்டை எடுத்து அதில் இந்த சாண்ட்விச் fillings ஐ வைத்து அதன் மேலே இன்னொரு பிரட்டை வைக்கவும்.
- பின்பு இதை toast செய்வதற்கு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி வெண்ணெய் உருகியதும் இந்த சாண்ட்விச்சை அப்படியே எடுத்து அதில் வைக்கவும்.
- இப்பொழுது அதன் மேலே சிறிதளவு வெண்ணெய்யை தடவி சாண்ட்விச்சை திருப்பி போடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு எடுத்து அதை கெட்சப் உடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்