பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. ஆனால் முட்டை பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்காக இந்த முட்டை பிரியாணி ரெசிபி.
இப்பொழுது கீழே முட்டை பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
முட்டை பிரியாணி
Ingredients
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 5 முட்டைகள்
- 1 கப் தயிர்
- 2 பெரிய வெங்காயம்
- 1 மேசைக்கரண்டி சீரகம்
- 2 கிராம்பு
- 2 பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள் தேவையான அளவு
- மிளகாய் தூள் தேவையான அளவு
- கரம் மசாலா தேவையான அளவு
- 1 1/2 மேசைக்கரண்டி பிரியாணி மசாலா
- 1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்
- 1 பிரியாணி இலை
- 1 துண்டு இஞ்சி
- 2 பூண்டு பல்
- 1 ஜாதிபத்திரி
- 1 நட்சத்திர பூ
- 1 துண்டு பட்டை
- 2 ஏலக்காய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- 1 கை அளவு புதினா
- 1 கை அளவு கொத்தமல்லி
Instructions
- முதலில் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து நன்கு தண்ணீரில் கழுவி சுமார் 45 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- அடுத்து 2 பெரிய வெங்காயத்தை நறுக்கி மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும். முட்டைகளை வேக வைத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சன்பிளவர் ஆயில் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் ஜாதிபத்திரி, நட்சத்திர பூ, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், மற்றும் பிரியாணி இலையை போட்டு வதக்கவும்.
- பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வெந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, மற்றும் பிரியாணி மசாலாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் புதினாவை சேர்த்து வதக்கவும்.
- புதினா இலை வதங்கியதும் அதில் ஒரு கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- இந்த மசாலா நன்கு ஒன்றோடு ஒன்று ஒட்டி தயாரானதும் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதில் போட்டு நன்றாக கிளறி விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி pan ல் ஒரு மூடி போட்டு அரிசியை வேக விடவும்.
- அரிசி வேகுவதர்குல் மிதமான சூட்டில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கால் மேசைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், சிறிதளவு கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அடுத்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் முட்டையில் செங்குத்தாக 3 அல்லது 4 கோடுகள் போட்டு இந்த மசாலாவில் போட்டு மசாலா நன்கு முட்டையில் படுமாறு பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். (முட்டையை ரொம்ப நேரம் வேக விடக்கூடாது.)
- இப்பொழுது பிரியாணி பாத்திரத்தின் மூடியைத் திறந்து பொறுமையாக கிளரி இந்த முட்டைகளை அதனுடன் சேர்த்து ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து மீண்டும் மூடியை போட்டு 5 லிருந்து 8 நிமிடம் வரை வேக விடவும்.
- 8 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து பிரியாணியை ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை பிரியாணி தயார்.
- இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.