பாவ் பாஜி இந்தியாவில் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை எந்த அளவிற்கு பிரபலம் என்றால் இவை இல்லாத chat shop களே இல்லை எனும் அளவிற்கு. மகாராஷ்டிர மாநிலத்தில் உதயமான இவை இன்று இந்தியா முழுவதும் இதனின் சுவையால் பிரபலமாகியுள்ளது. இவை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்களை மற்றும் செய்முறை விளக்கத்தை பின்பற்றி செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் இதை விரும்புபவர்கள் chat shop களிலேயே ஆர்டர் செய்து உண்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே எளிதாக செய்து விடலாம்.
இப்பொழுது கீழே பாவ் பாஜி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பாவ் பாஜி
Ingredients
- 3 உருளைக்கிழங்கு
- 2 கேரட்
- 8 to 10 பீன்ஸ்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 4 தக்காளி
- 3 வெங்காயம்
- 1 குடை மிளகாய்
- 1 லெமன்
- பாவ் பன் தேவையான அளவு
- பாவ் பாஜி மசாலா தேவையான அளவு
- மிளகாய் தூள் தேவையான அளவு
- வெண்ணெய் தேவையான அளவு
- 1 துண்டு இஞ்சி
- 2 பல் பூண்டு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
Instructions
- முதலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை வேக வைத்து எடுத்து காய்கறிகளை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
- பின்பு இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாயை போட்டு வதக்கவும்.
- குடை மிளகாய் சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, தேவையான அளவு மிளகாய் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு பாவ் பாஜி மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
- இப்பொழுது இந்த கலவையுடன் மசித்து எடுத்து வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- நன்கு கிளறிய பின் அதில் ஒரு கை அளவு கொத்தமல்லியைத் தூவி பின்பு ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி அதை பிழிந்து விட்டு நன்கு கிளறி விடவும்.
- அடுத்து 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும். (மசாலா கெட்டியாக வேண்டுமென்றால் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி தண்ணீரோடு நிறுத்திக் கொள்ளவும்.
- மசாலா சிறிது தண்ணியாக வேண்டுமென்றால் 4 அல்லது 5 மேசைக்கரண்டி அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.)
- காய்கறிகள் நன்கு வெந்து மசாலாவோடு ஒன்றோடு ஒன்று நன்கு கலந்த பின் இதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடலாம்.
- இறக்குவதற்கு முன் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
- இதை ஒரு தட்டில் போட்டு ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெயை அதன் மேலே ஊற்றி சிறிது கொத்தமல்லியை தூவி தயாராக வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் ஊற்றி அதை உருக விடவும்.
- வெண்ணெய் உருகியதும் அதில் பாவ் பன்னை இரண்டாக வெட்டி அதில் போட்டு சிறிது சிவந்ததும் மறு புறம் திருப்பி போட்டு எடுக்கவும்.
- பின்பு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்பிங் பாஜியை 2 பன்களுக்கு நடுவில் வைத்து பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டியான பாவ் பாஜி தயார்.
- இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.