பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் பரோட்டாவிற்கு என ஒரு தனி உணவுப் பிரியர்கள் கூட்டமே உண்டு. தமிழகத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழர்கள் குடி பெயர்ந்த இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் பரவியது. பரோட்டாவிற்கு வெஜிடபிள் குருமா, காலிஃப்ளவர் குருமா, சிக்கன் அல்லது மட்டன் குருமா, கொத்து கறி, அல்லது சால்னா மிகவும் அசத்தலான காம்பினேஷன் ஆக இருக்கும். என்ன தான் இதனின் அதீத சுவை உங்களை கட்டி இழுத்தாலும் பரோட்டாக்களை ஒரு அளவோடு உண்பது உடம்பிற்கு நல்லது.
பரோட்டா செய்வது சிறிது கடினமான வேலை என்பதால் பெரும்பாலும் இதை விரும்பி உண்ணும் நபர்கள் கூட இதை சிறு கடைகளில் அல்லது ரெஸ்டாரன்ட்களிலேயே ஆர்டர் செய்து உண்கிறார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் மிருதுவான பரோட்டாவை மிக எளிதாக வீட்டிலேயே செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்தலாம்.
இப்பொழுது கீழே பரோட்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பரோட்டா
Ingredients
- 2 கப் மைதா மாவு
- 3 மேஜைக்கரண்டி பால்
- 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
- வெண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
Instructions
- முதலில் 2 கப் அளவு மைதா மாவை எடுத்து ஒரு bowl ல் போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் 3 மேஜைக்கரண்டி அளவு பால் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை பிணையவும். (தண்ணியை சிறிது சிறிதாக கவனமாக சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்த்து விடக்கூடாது.)
- அடுத்து இந்த மாவை நன்கு அழுத்தி பிணைவதற்காக ஒரு பெரிய தட்டை எடுத்து அதை திருப்பி போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.
- பின்பு இந்த மாவை அதில் வைத்து நன்கு தேய்த்து சுமார் 15 நிமிடம் வரை பிணையவும்.
- பின்னர் அந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து அதை அப்படியே ஒரு மூடி போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
- ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மூடியைத் திறந்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- இப்பொழுது இந்த மாவைத் தேய்த்து தட்டில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒரு உருண்டையை அதில் வைத்து கைகளால் தட்டி அதை நன்கு பெரிதாக விதித்து விடவும்.
- பின்பு அதன் மேலே சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து ஒரு கத்தியின் மூலம் செங்குத்தான வாக்கில் அதில் கோடுகளை போடவும்.
- கோடுகளை போட்ட பின் அதை அப்படியே புரட்டி நீல வாக்குக்கு கொண்டு வந்து அதை பாம்பு போல சுருட்டி ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
- இவ்வாறு மீதமுள்ள உருண்டைகளையும் செய்து சுருட்டி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுடுவதற்குல் சுருட்டி வைத்திருக்கும் மாவை தேய்த்து எண்ணெய் சுட்டதும் அதை pan ல் போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
- அடுத்து பரோட்டா சூடாக இருக்கும் போதே அதைப் பக்குவமாக தட்டி சுட சுட குருமாவுடனோ அல்லது சால்னாவுடனோ பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பரோட்டா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.