Home Tamil இத்தாலியன் பாஸ்தா

இத்தாலியன் பாஸ்தா

0 comments
Published under: Tamil
பாஸ்தா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாகும்.

பாஸ்தா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். அதற்குக் காரணம் அதன் அதீத சுவை. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பாஸ்தாவின் சுவைக்கு அடிபணியாதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு பாஸ்தாவின் சுவை சமையலில் தனி இடத்தை பிடித்து வைத்திருக்கின்றது.
பாஸ்தா இத்தாலியர்களின் பராம்பரிய உணவாகும். பாஸ்தா என்ற இத்தாலிய வார்த்தைக்கு பேஸ்ட் என்று அர்த்தம் .

Italian Veg Pasta

பாஸ்தா என்பது கோதுமை மாவை அடிப்படையாக வைத்து ரெடி செய்யப்படும் உணவு ஆகும். இந்தக் கோதுமை அதிக புரோடீன் சத்து கொண்டது. பாஸ்தா பல்வேறு வடிவங்களில் கிடைக்கும். நூடுல்ஸ் வடிவும் மிகப் பிரபலமானது என்றாலும் பாஸ்தா உருளை வடிவம், நைட்சத்திர வடிவம் என்று நூற்றுகணக்கான வடிவங்களில் கிடைக்கும்.
சுண்டி இழுக்கும் சுவை கொண்ட பாஸ்தா சில ஆண்டுகளுக்கு முன்புவரை பணக்காரர்கள் மட்டுமே உண்ணக்கூடிய உணவாக இருந்தது , ஆனால் இன்று அனைத்து தரப்பினரும் உண்ணக்கூடிய உணவாக மாறியுள்ளது பாஸ்தா.

Italian Veg Pasta
5 from 1 vote

இத்தாலியன் பாஸ்தா

பாஸ்தா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாகும்.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Main Course
Cuisine: Italian
Keyword: pasta
Servings: 2 people

Ingredients

  • ஒரு கப் பாஸ்தா
  • 200 கிராம் தக்காளி
  • ஒன்று வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • கால் தேக்கரண்டி தேன
  • தேவைக்கு உப்பு
  • அரை தேக்கரண்டி மிளகு தூள்
  • 3 சிவப்பு பழுத்த மிளகாய்
  • 4 பேசில் இலை
  • 2 சிட்டிகை ஓரிகனோ
  • 4 தேக்கரண்டி மொசரேல்லா சீஸ் துருவியது
  • கால் தேக்கரண்டி ஆலிவ் ஆயில்
  • 2 சிட்டிகை ரோஸ்மரி

Instructions

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • அதில் பாஸ்தாவைக் போட்டு பதமாக வேக வைக்கவும் .
  • ஒட்டும் தன்மையை தவிர்க்க சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
  • வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் வடித்து எடுக்கவும்.
  • தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், அரைத்த தக்காளி, தேன், மிளகு தூள், ஓரிகனோ , ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.
  • அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும்.
  • பாஸ்தாவை பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸ் துருவி சூடாக பரிமாறவும்.

 

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter