451
எலுமிச்சை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் சுவைமிக்க நூடுல்ஸ் கொண்ட ஆரோக்கியமான தெளிவான சூப்.
தேவையான பொருட்கள்
- நூடல்ஸ் – கால் கப் (உப்பு போட்டு வேகவைத்த நூடல்ஸ்)
- எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
- வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
- கொத்தமல்லி ஜூஸ் – அரை கப்
- பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
- கேரட் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
- ஸ்வீட் சோளம் – இரண்டு டீஸ்பூன்
- எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்
- மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
- சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
- உப்பு – தேவைகேற்ப
செய்முறை
- கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி அதில் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி எடுத்து கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பீன்ஸ், கேரட், ஸ்வீட் சோளம் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- காய்கள் வெந்ததும் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டிய கொத்தமல்லி சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு மிளகு தூள், சீரக தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலக்கி பரிமாறவும்.