ஒரு சுவையான, ருசியான மற்றும் எளிதாக செய்யக்கூடிய சைட் டிஷ்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – அரை கப்
அவரைக்காய் – அரை கப்
பாதாம் – ஆறு (ஒரு மணி நேரம் ஊறவைத்து, விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – நான்கு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – ஆறு
கொத்தமல்லி – ஒரு கை
பிரிஞ்சி இலை – ஒன்று
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
தயிர் – கால் கப் (புளிக்காத தயிர்)
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
வறுத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின், அரைத்த விழுது மற்றும் பாதாம் விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு, நறுக்கிய அவரைக்காய், பன்னீர், தயிர், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.