தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – மூன்று
தனியா – ஒரு கைப்பிடி
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – மூன்று (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
முந்திரி – எட்டு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
பிரிஞ்சி இலை – ஒன்று
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு\
சீரகம் – அரை டீஸ்பூன்
குடைமிளகாய் ,மூன்று கலர் – அரை கப் (நறுக்கியது)
நறுக்கி, வேகவைத்த உருளைகிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ் – ஒரு கப்
உப்பு – தேவைகேற்ப
அலங்கரிக்க:
முந்திரி – சிறிதளவு
கீரிம் – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, அதே கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் முந்திரி, வெங்காயம், தக்காளி, சேர்த்து வறுத்த எடுத்து கொள்ளவும்.
பின், வறுத்த இரண்டையும் சேர்த்து, அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கி வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும், வேகவைத்த காய்கறிகள் சேர்த்து வதக்கவும், பின், தாளித்த மற்றும் அரைத்து வதக்கிய விழுது சேர்த்து நன்றாக வதக்கவும், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு, ஒரு கிண்ணத்தில் ஊற்றி மேலே கீரிம், முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.