ஸ்டாட்டர்ஸ் வகையை சேர்ந்த இந்த சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையுண்டு சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி சூப். என்ன தான் இத்தனை சூப் வகைகள் இருந்தாலும் சூப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது ஆட்டு கால் சூப் தான். அதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. ஆனால் அசைவம் உண்ணாதவர்கள் மத்தியில் வெஜிடபிள் மற்றும் மஷ்ரூம் சூப்பே டாப் சாய்ஸ் ஆக இருக்கிறது.
வெஜிடபிள் சூப்புகளில் வரலாறு நீண்ட நெடியது. இவை ஐந்தாம் நூற்றாண்டின் போது ரோம சாம்ராஜ்யத்தில் உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வெஜிடபிள் சூப்பில் பல காய்கறிகளை சேர்ப்பதனால் இது உடம்புக்கு மிகவும் சத்தானது. காய்கறிகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பல காய்கறிகளை ஒரே சூப்பில் சேர்த்து வெகு சுலபமாக செய்து கொடுத்து விடலாம். இப்பொழுது கீழே வெஜிடபிள் சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய் முறை விளக்கத்தையும் காண்போம்.
வெஜிடபிள் சூப்
Ingredients
- 2 கேரட்
- 10 to 12 பீன்ஸ்
- 1 கப் சோளம்
- 1/4 கப் முட்டைகோஸ்
- 1/4 கப் பெரிய வெங்காயம்
- 1 மேஜைக்கரண்டி சோள மாவு
- 2 பூண்டு பல்
- மிளகுதூள் தேவையான அளவு
- ஸ்பிரிங் ஆனியன் தேவையான அளவு
- 1 மேஜைக்கரண்டி சோயாசாஸ்
- சூப் ஸ்டிக்ஸ் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
Instructions
- முதலில் கேரட், பீன்ஸ், சோளம், பெரிய வெங்காயம், முட்டைகோஸ், மற்றும் பூண்டை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அரை கப் அளவு சோளத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- பூண்டின் பச்சை வாசம் போனதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
- பின்பு நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் சோளம் மற்றும் முட்டை கோசை அதில் போட்டு கிளறவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள சோளத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சூப் சிறிது திக்காக வருவதற்கே சோளத்தை அரைத்து சேர்க்கிறோம்.)
- இப்பொழுது இந்த கலவையுடன் 5 கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை காய்கறிகளை வேக விடவும்.
- 20 நிமிடத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் காய்கறிகள் நன்றாக வெந்திருக்கும். (காய்கறிகள் வேகாமல் இருந்தால் இன்னும் ஒரு 4 அல்லது 5 நிமிடம் வேக விடவும்.)
- சூப் தண்ணியாக இருந்தால் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கின்ற சூப்புடன் சேர்த்து கலக்கி இன்னும் ஒரு 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு மிளகுதூள் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
- சூப்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நறுக்கி வைத்துள்ள ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு கலக்கு கலக்கி இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான வெஜிடபிள் சூப் தயார். இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூப் ஸ்டிக்ஸ்லோடு பரிமாறலாம்.
- இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Sign up for our newsletter
Vegetable Soup Recipe in English