இது ஒரு சுவையான கேரளா உணவு. தேங்காய் கிரேவியில் இறால்கள் சமைத்து, சாதம் உடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
இறால் – அரை கப் (சுத்தம் செய்தது)
நலெண்ணெய் – ஒரு குழிகரண்டி
தேங்காய் எண்ணெய் – ஒரு குழிகரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – அரை கப்
கரிவேபில்லை – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
புளி விழுது – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
கடாயில் கடலெண்ணெய் அரை குழிகரண்டி ஊற்றி காய்ந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வந்ததும் சிம்மில் வைத்து அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், பூண்டு ஐந்து பல், சின்ன வெங்காயம், கரிவேபில்லை சேர்த்து வதக்கி ஆறியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
இன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை, இஞ்சி துருவல், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் பத்து சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், இறால் சேர்த்து ஐந்து நிமிடம் பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு, அதில் அரைத்த விழுது மற்றும் புளி கரைச்சல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
image via youtube