தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை – ஒரு கப்
நெய் – ஒரு குழிகரண்டி
எண்ணெய் – ஒரு குழிகரண்டி
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
பிரிஞ்சி இலை – ஒன்று
முந்திரி – ஐந்து
பச்சை மிளகாய் – மூன்று (கீறியது)
புதினா – ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
வெங்காய விழுது – இரண்டு டீஸ்பூன்
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
தயிர் – மூன்று டீஸ்பூன்
பாசுமதி அரிசி – ஒரு ஆழாக்கு
தண்ணீர் – இரண்டு ஆழாக்கு
மசாலா பொடி செய்ய:
காய்ந்த மிளகாய் – இரண்டு
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
செய்முறை
கடாயில் நெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் வெந்தயக்கீரை சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
பச்சை மிளகாய், புதினா, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு, வெங்காய விழுது, தக்காளி, உப்பு, தயிர், வதக்கிய வெந்தயக்கீரை, பாசுமதி அரிசி சேர்த்து கிளறவும்.
பின், தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவந்ததும் மசாலா பொடி சேர்த்து மூடிவிடவும்.
ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.