பாயாசம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு வகை. குறிப்பாக தென்னிந்தியாவில் பண்டிகை நாட்கள் மற்றும் கல்யாண விருந்துகளில் பாயாசம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். தென்னிந்தியாவில் பாயாசம் இல்லாத விருந்துகளை நாம் காண்பதே அரிது. பாயாசங்களில் பல வகை உண்டு. அதில் பால் பாயாசம், சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், அவல் பாயாசம், மற்றும் இளநீர் பாயாசம் மிகவும் பிரபலமானது. நாம் இன்று இங்கு காண இருப்பது தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் வித்தியாசமான இளநீர் பாயாசம்.
இளநீர் பாயாசத்தை நாம் பால் மற்றும் இளநீர் தண்ணீரை கொண்டு செய்வதால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது. மேலும் மற்ற பாயாசங்களை நாம் பல முறை செய்து சுவைத்திருப்போம் அதனால் இளநீர் பாயாசத்தை அவைகளுக்கு ஒரு சேஞ்சாக நாம் செய்து சுவைக்கலாம். குறிப்பாக வீட்டிற்கு உறவினர்கள் விருந்துக்கு வரும் போது அவர்களுக்கு இந்த இளநீர் பாயாசத்தை செய்து கொடுத்து அசத்தலாம்.
இப்பொழுது கீழே இளநீர் பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
இளநீர் பாயாசம்
Ingredients
- 2 இளநீர்
- ½ லிட்டர் பால்
- 150 கிராம் சர்க்கரை
- 1 கப் மில்க்மெய்ட்
- 2 மேஜைக்கரண்டி சாரை பருப்பு
- 8 to 10 முந்திரி
- 8 to 10 பாதாம்
- 8 to 10 பிஸ்தா
- ¼ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
- தேவையான அளவு நெய்
Instructions
- முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, இளநீரை சீவி அதில் இருக்கும் தண்ணீர் மற்றும் வழுக்கையை எடுத்து தனித்தனியாக இரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு இளநீரில் இருக்கும் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்பு மற்றொரு இளநீரில் இருக்கும் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு இளநீர் தண்ணியை ஊற்றி அதை நன்கு அரைக்கவும்.
- பிறகு அதில் மீதமுள்ள இளநீர் தண்ணீரையும் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை நன்கு சுட வைக்கவும்.
- பால் நன்கு காய்ந்தவுடன் அதில் மில்க்மெய்டை ஊற்றி அது நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் அதை கலந்து விடவும்.
- அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து அது கரையும் வரை அதை நன்கு கிண்டி விடவும்.
- பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து அதை நன்கு கிண்டி விடவும்.
- பிறகு அதில் சாரை பருப்பு மற்றும் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வழுக்கையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து நன்கு ஆற விடவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- நெய் சுட்டபின் அதில் முந்திரியை போட்டு அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்பு நாம் ஆற வைத்திருக்கும் பால் ஆறியதை உறுதி செய்த பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கை மற்றும் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (பால் சூடாக இருக்கும் போது அரைத்த இளநீர் வழுக்கை அதில் சேர்த்தால் அது திரிந்து விடும்.)
- அடுத்து இந்த இளநீர் பாயாசத்தை ஃபிரிட்ஜில் சுமார் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை வைக்கவும்.
- 2 மணி நேரத்திற்கு பிறகு அதை ஃபிரிட்ஜில்லிருந்து எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் பாதாம் துண்டுகளை தூவி அதை சில்லென்று பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் ஜில்லென்று இருக்கும் இளநீர் பாயாசம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
Sign up for our newsletter
Elaneer Payasam Recipe in English