தேவையான பொருட்கள்
திணை மாவு – இரண்டு டீஸ்பூன்
ராகி மாவு – இரண்டு டீஸ்பூன்
கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
பால் பவுடர் – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
முருங்கை கீரை – சிறிதளவு
காய்ந்த திராட்சை – தேவைகேற்ப
கிரைவி செய்ய:
வெங்காயம் – ஒன்று
தக்காளி – இரண்டு
கசகசா – அரை டீஸ்பூன்
முந்திரி – ஐந்து
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மல்லி தூள் – ஒரி டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
உருண்டை செய்ய:
ஒரு பாத்திரத்தில் தினை மாவு, ராகி மாவு, கடலை மாவு, பால் பவுடர், மிளகு தூள் சிறிதளவு, உப்பு, முருங்கை கீரை, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி நடுவில் காய்ந்த திராட்சை வைத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கிரைவி செய்ய:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, முந்திரி, பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, வறுத்த உருண்டைகளை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.