தேவையான பொருட்கள்
பச்சரிசி – இரண்டு கப்
பாசிப்பருப்பு – அரை கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஐந்து கிராம்
பச்சை மிளகாய் – இரண்டு
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
முந்திரி – பத்து
கேரட் – ஒன்று (நறுக்கியது)
பச்சை பட்டாணி – கால் கப்
பூண்டு – இரண்டு பல் (பொடியாக நறுக்கியது)
மிளகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 5௦ மில்லிலிட்டர்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
அரிசியை உப்பு போட்டு நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும்.
பிறகு, பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, குழைய வேகவைத்து கொள்ளவும்.
பட்டாணியை தனியாக வேகவைக்கவும்.
வேகவைத்த பருப்பு மற்றும் பருப்பு தண்ணீர், வேகவைத்த அரிசி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், கரிவேபில்லை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கேரட் சேர்த்து வதக்கவும்.
அதன் பின், வேகவைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேகவைத்த அரிசி, பருப்பு கலவையை கலந்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கி கொள்ளவும்.
நெய், நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி ஆகியவற்றை அதனுடன் கலந்து சூடாக பரிமாறினால் சுவை அறுமையாக இருக்கும்.
Vegetable Pongal Recipe in English