புதினா சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் புதினா சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது புதினா ரைஸ். புதினாவில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து, புரத சத்து, மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. இதில் நாம் பச்சை பட்டாணி மற்றும் வேர்க்கடலையை சேர்த்து செய்வதால் உடம்பிற்கு புரத சத்து நன்கு கிடைக்கும்.
புதினா ரைஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை உடம்பிற்கு மிகவும் இதமான தன்மையை கொடுக்கும். இதை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் எளிமையானவை தான். இதில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இதை நாம் வாரத்திற்கு ஒரு முறை என்று நம் உணவு பழக்கத்தில் சேர்த்து கொள்ளலாம். நம் குழந்தைகளுக்கும் புதினா ரைஸ் மிகவும் பிடிக்கும் மேலும் அவர்களின் உடம்பிற்க்கும் இவை தெம்பூட்டும்.
இப்பொழுது கீழே புதினா ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
புதினா ரைஸ்
தேவையான பொருட்கள்
- 1 கப் புதினா இலை
- 1 கப் வேக வைத்த ரைஸ்
- 100 கிராம் பச்சை பட்டாணி
- 6 to 8 சின்ன வெங்காயம்
- 4 to 6 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- 2 சிவப்பு மிளகாய்
- ½ மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1½ மேஜைக்கரண்டி வேர்க்கடலையை
- 1 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- 1 எலுமிச்சம் பழம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் பூண்டை தயார் செய்து, தேங்காயை துருவி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து, புதினா இலையை நன்கு சுத்தம் செய்து கழுவி, மற்றும் அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- 30 நிமிடத்திற்கு பிறகு அரிசியை மீண்டும் நன்கு கழுவி அதை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பச்சை பட்டாணியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சுட்டதும் அதில் பச்சை பட்டாணியை போட்டு அதை வேக வைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மற்றும் பூண்டை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதை சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா இலையை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும். (புதினா இலை நன்கு சுருளும் வரை அதை வதக்கவும்.)
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- அது ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரூக்கு மாற்றி அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். (தேவையான அளவு தண்ணீர் சேர்த்தால் போதும் அதிகமாக தண்ணீர் சேர்த்து விடக்கூடாது.)
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, மற்றும் கடலை பருப்பை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் புதினா பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதனுடன் வேர்க்கடலையையும் சேர்த்து அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு புதினா ரைஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான புதினா ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.