தேவையான பொருட்கள்
காரட் – கால் கப்
பேபி கார்ன் – கால் கப்
கோஸ் – கால் கப்
காலிஃபிளவர் – கால் கப்
சோல மாவு – நான்கு டீஸ்பூன்
மைதா மாவு – இரண்டு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
சோயா சாஸ் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைகேற்ப
க்ரேவி செய்ய :
எண்ணெய் – தேவைகேற்ப
பூண்டு பல் – ஐந்து (நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
சில்லி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
இஞ்சி பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
சோயா சாஸ் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் காரட், காலிஃபிளவர், கோஸ், பேபி கார்ன், சோல மாவு, மைதா மாவு, உப்பு, இஞ்சி, பூண்ட விழுது, சோயா சாஸ் சிறிதளவு தண்ணிர் ஊற்றி நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பக்கோடா போல் போட்டு பொன்னிறமானதுடன் பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பொண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், சில்லி பேஸ்ட், தக்காளி சாஸ், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணிர் ஊற்றி கொதிக்க விட்டு பிறகு வறுத்த காய்கறிகளை அதில் போட்டு நன்றாக கிளறி கொத்தமல்லி துவி இறக்கவும்.
Stir-Fried Vegetables recipe in English