இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. நாவில் வைத்தவுடன் கரைந்து அதீத சுவை தரும் இதன் தன்மையே இதற்குக் காரணம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறுகிறதா?
குலாப் ஜாம்களின் பிறப்பிடம் இந்தியா தான் என்று ஒரு சாராரும். மற்றொரு சாரார் இவை முகலாய படையெடுப்பின் போது இந்தியாவுக்கு வந்து அடைந்ததாகவும் கூறுகின்றனர். இவை பெரும்பாலும் இந்திய துணைக் கண்டத்திலேயே செய்யப்படுகின்றது. ஆனால் இவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு செய்முறை யோடு மற்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை இந்தியா மற்றும் நேபாளத்தில் gulab jamun என்றும், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தானில் gulaabujaanu என்றும், மியான்மர் மற்றும் பங்களாதேஷில் golap jam என்றும், மொரிஷியஸ் மட்டும் பிஜியில் Guyana என்றும் அழைக்கப்படுகிறது.
நாவில் வைத்த வினாடியிலேயே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுனும் செய்முறையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் இதனின் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால் குலாப் ஜாமுன் செய்யும் போது மிகக் கவனமாக மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் அவசியம். இப்பொழுது கீழே குலோப் ஜாம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
குலாப் ஜாமுன்
Ingredients
- 500 கிராம் குலோப் ஜாம் மாவு
- 700 கிராம் சர்க்கரை
- நெய் தேவையான அளவு
- ஏலக்காய் தூள் தேவையான அளவு
- பிஸ்தா தேவையான அளவு
Instructions
- முதலில் ஒரு bowl ல் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பக்குவமாக பிசைந்து கொள்ளவும். (மாவை அழுத்தியோ அல்லது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைய கூடாது.
- அப்படி பிசைந்தால் குலோப் ஜாம்ஐ பொரித்து எடுக்கும் போதே இறுக்கமாக அல்லது விரிசல் விழுந்து விடும்.)
- மாவை பக்குவமாக பிசைந்ததும் அதில் தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.
- மாவு பக்குவத்தை எட்டுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு சர்க்கரைக்கு மேலே ஒரு இன்ச் அதிகமாக தண்ணீர் வருமளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அடுப்பிலிருந்து இறக்கி பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு வட சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக பக்குவமாக உருட்டிஎண்ணெயில் போடவும். (மாவை சிறு சிறு உருண்டைகளாக ஒரே நேரத்தில் உருட்டி வைக்கக்கூடாது. ஏனென்றால் மாவில் விரிசல் விழுந்து விடும்.)
- மாவு உருண்டைகளை மெதுவாக திருப்பி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
- உருண்டைகள் இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.
- அப்பொழுது தான் குலோப் ஜாம்ல் ஜீரா நன்றாக ஒட்டி மிருதுவாக இருக்கும்.
- இவ்வாறு வடசட்டியின் அளவிற்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறையாக உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து ஜீராவில் போடவும்.
- மொத்தமாக பொரித்து போட்டதும் அதை அப்படியே ஒரு மூடி போட்டு 5 லிருந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
- 6 மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதன் மேலே சிறு பிஸ்தா துண்டுகளை வைத்தால் உங்கள் இனிப்பான, சுவையான குலோப் ஜாம் தயார்.
- இது வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டாருக்கு கொடுத்து உண்டு மகிழுங்கள்.
Sign up for our newsletter