தேவையான பொருட்கள்
சேமியா – 200 கிராம்
வெங்காயம் – ஒன்று (பெரியது)
தக்காளி – ஒன்று
கேரட் – ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சீரக தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லித் தழை – ஒரு கொத்து
புதினா – ஒரு கொத்து
எண்ணெய் – 4 தேக்கரண்டி
முட்டை – 2 (தேவைப்பட்டால்)
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.
மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் சேமியாவை போட்டு வேக வைத்து வடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், உப்பு, கேரட் சேர்த்து கிளறி விடவும்.
அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
வடித்து வைத்திருக்கும் சேமியாவை அதில் போட்டு கிளறி விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
முட்டையை கொத்தி அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
மூடி போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 2 நிமிடம் வைக்கவும்.
பிறகு மூடியை திறந்து மல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான சேமியா கிச்சடி ரெடி.