தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 5
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – 2 இணுக்கு
தக்காளி – ஒன்று
கொத்தமல்லித் தழை – சிறிது
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
மல்லி – ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் – 2 (காரத்திற்கேற்ப)
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 இணுக்கு
தாளிக்க:
கடுகு
கடலைப் பருப்பு
எண்ணெய்
செய்முறை
கத்தரிக்காயை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் ஆறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு கத்தரிக்காயை அதில் போடவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களில் முதலில் வறுத்த மல்லியை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் மற்ற பொருட்களைப் போட்டு பொடியாக்கவும். (தண்ணீர் ஊற்றி அரைக்க தேவையில்லை).
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி போட்டு குழைய வதக்கவும்.
வதங்கியதும் கத்தரிக்காய், மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி சாம்பார் பொடி (விருப்பப்பட்டால்) போட்டு நன்றாக கிளறிவிடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து பொடி செய்தவற்றை போட்டு கிளறவும்.
சிறிது நீர் விட்டு மூடி வைக்கவும்.
அடிக்கடி கிளறிவிடவும். நீர் போதவில்லையெனில் சிறிது ஊற்றவும்.
உடையாமல் கிளறிவிடவும் விரைவில் வெந்துவிடும்.
வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி.
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிக சுவையாக இருக்கும்.
English version of this recipe here