Home Tamil பலா கொட்டை மாங்காய் கறி

பலா கொட்டை மாங்காய் கறி

0 comments
Published under: Tamil

jackfruit seeds

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் + ஒரு டீஸ்பூன்

கடுகு – சிறிதளவு

சின்ன வெங்காயம் – நான்கு + மூன்று

கரிவேபில்லை – சிறிதளவு

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி விழுது – அரை டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – இரண்டு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்

தண்ணீர் – தேவைகேற்ப

பலா கொட்டை அரைவேக்காடு வேகவைத்து தோலுரித்து – அரை கப்

மாங்காய் – அரை கப் (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் விழுது – கால் கப்

மிளகாய் பொடி – இரண்டு சிட்டிகை

செய்முறை

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நான்கு சின்ன வெங்காயம், கரிவேபில்லை, பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பெரிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.

பிறகு, அரைவேக்காடு வேகவைத்த பலா கொட்டை, மாங்காய், உப்பு சேர்த்து சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் ஏறகிவைத்து கொள்ளவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மூன்று சின்ன வெங்காயம், கரிவேபில்லை, மிளகாய் பொடி சேர்த்து வதக்கிய பின்பு பலா கொட்டை மாங்காய் கறியை இதில் சேர்க்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து எறக்கி பரிமாறவும்.

image credit

 

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter