கீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு ஒரு சுவையான பஞ்சாபி சைட் டிஷ்.
தேவையான பொருட்கள்
பாலக் கீரை – ஒரு கட்டு
சின்ன உருளைக்கிழங்கு – பன்னிரண்டு (வேகவைத்து தோலுரித்தது)
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
விழுதாக அரைத்த வெங்காயம் – ஒன்று
விழுதாக அரைத்த தக்காளி – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியாதூள் – கால் டீஸ்பூன்
சீரக தூள் – கால் டீஸ்பூன்
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
சக்கரை – அரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – அரை டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – இரண்டு
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வேகவைத்து தோலுரித்த சின்ன உருளைக்கிழங்கு, வெங்காய விழுது, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாதூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா, தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பாலக் கீரை அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு, எறக்கி சப்பாத்தி உடன் பரிமாறவும்.
image via flickr