தேவையான பொருட்கள்
ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு – ஒன்றை கப்
கறிவேப்பலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
பூண்டு – ஐந்து பல் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – நான்கு
வெங்காயம் – மூன்று (நறுக்கியது)]
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
தேங்காய் பால் – ஒரு கப்
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
பிரிஞ்சி இலை – இரண்டு
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தண்ணீர் – தேவைகேற்ப
செய்முறை
வடை: ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு, கறிவேப்பலை, வெங்காயம், சோம்பு, உப்பு, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி போட்டு பொன் நிறம் வந்தவுடன் எடுக்கவும்.
கிரேவி: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், தண்ணீர் ஊற்றி நன்றாக மிலறி கொத்தமல்லி துவி மூடிபோட்டு வேகவிடவும் எட்டு நிமிடகள் கழித்து தேங்காய் பால் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும், பிறகு சுட்ட வடையை போட்டு அரை நிமிடம் கழித்து எறக்கினால் சுவையான வட கறி ரெடி.
2 comments
i like this dish very much..
i like